எகிறும்: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கட்-ஆப்...நீட் எளிதானதால் போட்டி அதிகரிக்க வாய்ப்பு : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Saturday 26 September 2020

எகிறும்: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கட்-ஆப்...நீட் எளிதானதால் போட்டி அதிகரிக்க வாய்ப்பு :


புதுச்சேரி; நீட் தேர்வு எளிமையாக இருந்ததால், இந்தாண்டு சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கை'கட் -ஆப்' மதிப்பெண் உயரும் வாய்ப்புள்ளது.புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் 3 சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள், நீட் மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப் படுகிறது.நீட் தேர்வு கடந்த 13ம் தேதி நடந்தது. இதன் முடிவு, வரும் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.இந்த நிலையில், கதிர்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான கடந்த ஆண்டு 'கட் ஆப்' மதிப்பெண் வெளியாகியுள்ளது.கடந்தாண்டு சென்டாக் கலந்தாய்வில், அரசு மருத்துவ கல்லுாரியில் பொது பிரிவு கட் ஆப் - 411. காரைக்கால் ஒதுக்கீடு கட் ஆப் - 354, - மாகி - 383, ஏனாம் -394 ஆக உள்ளது.ஓ.பி.சி. பிரிவு: புதுச்சேரி - 378, காரைக்கால் - 360, மாகி - 430.எம்.பி.சி., பிரிவு: புதுச்சேரி - 374. காரைக்கால் - 237, மாகி - 306, ஏனாம் - 158.எஸ்.சி. பிரிவு: புதுச்சேரி -230, காரைக்கால்-188, ஏனாம் - 312, பழங்குடியினர் - புதுச்சேரி 344.பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒதுக்கீடு கட் ஆப் -196. பி.சி.எம்.

ஒதுக்கீட்டில் புதுச்சேரி - 363, காரைக்கால் -150. இ.பி.சி. கட்ஆப் -344 நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு நீட் தேர்வு எளிதாக அமைந்து இருந்தது.

இதனால், கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகபட்ச மதிப்பெண் சுமார் 30 முதல் 50 வரை கூடும் என கல்வி யாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்ணை விட கூடுதலாக 30 மதிப்பெண் பெற்றால் மருத்துவ சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சுயநிதி மருத்துவ கல்லுாரிஅரசு ஒதுக்கீடு கட்ஆப் விபரம். கல்லுாரி - பொது - ஒ.பி.சி - எம்.பி.சி. -எஸ்.சி. - பி.சி.எம் - இ.பி.சி.பிம்ஸ் - 363 - 363 - 351 - 201 - 362 - 339மணக்குள விநாயகர் - 328 - 334 - 316 - 184 - 325 - 329வெங்கடேஸ்வார - 322 - 318 - 307 - 180 - 311 - 326

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H