ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
திருவள்ளூர் மாவட்டம், கோனோட்டம்பேட்டை என்ற கிராமத்தில், தாய் மாமன்
சீனிவாசராவ் வீட்டில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தார். அதன் பின், தன்
ஐந்தாவது வயதில், தந்தை எஸ்.பி.சாம்பமூர்த்தியின் சொந்த ஊரான
நெல்லுாருக்கு, தாய் சகுந்தலாம்மாள் உடன் சென்று விட்டார். நெல்லுாரில்
உள்ள அரசு பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல், ஏழாம் வகுப்பு வரை,
தெலுங்கில் படித்தார். 1955 - 57 வரை, நகரி டவுன் அரசினர் உயர்நிலையில், 8
மற்றும் 9ம் வகுப்பு படித்தார். அந்த பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர்
ராதாபதி, நல்ல முறையில் பாடம் சொல்லிக் கொடுத்ததால், அந்த ஆசிரியர் மீது,
பாலசுப்பிரமணியத்திற்கு ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர், ஆசிரியர் ராதாபதி,
காளஹஸ்தி அரசினர் உயர்நிலை பள்ளிக்கு பணியிடம் மாற்றப்பட்டு
விட்டார்.இருந்தாலும், ஆசிரியர் ராதாபதியிடம் தான் படிக்க வேண்டும் என்ற
ஆர்வத்தில், காளஹஸ்தி, அரசு உயர்நிலை பள்ளியில், எஸ்.பி.பி., பத்தாம்
வகுப்பு சேர்ந்தார்.
நகரி அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் போதே,
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சினிமா பாடல்களை நன்றாக பாடுவர். இதனால், அந்த
பள்ளியில் இறைவணக்கம் தினமும் பாடுவர். மேலும், பள்ளியில் எந்த நிகழ்ச்சி
நடந்தாலும், சக மாணவர்கள், எஸ்.பி.பி.,யை பாட வைப்பர். மேலும், 54
ஆண்டுகளுக்கு பின், 2011ல், நகரி அரசினர் உயர்நிலை பள்ளியில் நடந்த,
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பங்கேற்றார்.அதே போல், 2015ல் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
நிகழ்ச்சியிலும பங்கேற்று, சக மாணவர்களுடன், பழைய நினைவுகளை
நினைவுகூர்ந்து, பாடல்கள் பாடி மகிழ்வித்தார்.கடந்த, 2018ல்,
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தன் பிறந்த நாளை, பிறந்த மண்ணான கோனோட்டம் பேட்டை
யில், பிரமாண்டமான மேடை அமைத்து, கேக் வெட்டி கொண்டாடினார்.
'இளமையிலேயே நல்ல குரல் வளம் கொண்டவர்'மறைந்த திரைப்பட பாடகர்
எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், நானும், எட்டாம் வகுப்பும், ஒன்பதாம்
வகுப்பும், ஒன்றாக படித்தோம். அந்த காலத்திலேயே, அவர் மிகவும்
சுறுசுறுப்புடன் இருப்பார். பள்ளியில் தினமும் காலையில், அவரே இறைவணக்கம்
பாடுவார்.நல்ல குரல் வளம் உள்ளவர்கள். எங்கள் வீட்டிற்கு வரும் போது,
வற்புறுத்தினால், எங்களுடன் சேர்ந்து உணவு சாப்பிடுவார்.
என் தாய்,
தந்தையரை அத்தை, மாமா என, அன்புடன் அழைப்பார். எஸ்.பி.பி.,யின், தன் தாய்
மாமன் வீட்டில் தங்கி படித்தபோது, அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு
கிடைத்தது. அவருடன் பள்ளியில் படித்த நாட்கள் இனிமையானவை.அனைத்து
மாணவர்களுடன் இனிமையாக பழகுவர். பள்ளி ஆசிரியர்களுக்கும், எஸ்.பி.பி.,யின்
மீது மரியாதை இருந்தது.சினிமா பாடகராக உலகம் முழுதும், அனைத்து மொழிகளிலும்
பாடி உலகம் புகழ் பெற்றார். அவரது இழப்பு ரசிகர்களுக்கு பேரிழப்பு. அவர்
மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற பாடல்களால் என்றும் நிலைந்து
நிற்பார்.ஓ.பாலசுப்பிரணியம் எஸ்.பி.பி.,யுடன் படித்த நண்பர், நகரி டவுன்.