இப்போ ஸ்கூல் ஓப்பன் பண்ணாதீங்க... முதல்வருக்கு வந்த எச்சரிக்கை ட்வீட்! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Home Top Ad


https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Saturday, 26 September 2020

இப்போ ஸ்கூல் ஓப்பன் பண்ணாதீங்க... முதல்வருக்கு வந்த எச்சரிக்கை ட்வீட்!

கொரோனா அச்சம் காரணமாக, கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல், நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளை அறிவித்தது.

 'ஒன்பது முதல் ப்ளஸ் 2 வரையிலான வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் செப்டம்பர் 21 ஆம் தேதியில் இருந்து தங்களது சுயவிருப்பத்தின்படி பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனைகளை பெறலாம்' என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பையடுத்து, பத்தாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்கள், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு செல்லலாம். அவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரச நேற்று அதிரடியாக அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது சூழலில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ட்விட்டரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவனரும், வழக்கறிஞருமான ராஜசேகரன் என்பவர் முதல்வருக்கு டேக் செய்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " மழைக்காலத்தில் கொரோனா அதிகமாக பரவும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த காலத்தில் டெங்கு காய்ச்சல், சளித் தொல்லை போன்றவையும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இவற்றின் காரணமாக மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதுடன், அவர்கள் மூலமாக, கொரோனா சமூக பரவலாக மாறும் அபாயம் உள்ளது.

லண்டனில் மாணவர்கள் மூலமாகதான் கொரோனாவின் இரண்டாவது அலை பரவியது. எனவே மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் நலன் கருதி, பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பான அரசாணையை திரும்பப் பெற நீங்கள் உத்தரவிட வேண்டும்" என்று தமது ட்விட்டரில் பதிவில் ராஜசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

1 comment:

  1. Then please don't give Salary for Government School Teachers also.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.