பாடகர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மைக் கொண்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 16 மொழிகளில், இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இவர், கின்னஸ் சாதனைகளையும் படைத்திருக்கிறார். இதுவரை 6 முறை தேசிய விருது வென்ற இவர், பல்வேறு என்னனெற்ற விருதுகளை பெற்றிருக்கிறார். அந்த விருதுகள் பற்றிய முக்கிய தொகுப்பை தற்போது பார்க்கலாம்..
எஸ்.பி.பி பெற்ற முக்கியமான விருதுகளின் தொகுப்பு..
இந்திய அரசின் முக்கிய விருது :-
1. பத்மஸ்ரீ விருது - 2001-ஆம் ஆண்டு
2. பத்ம பூஷன் - 2011-ஆம் ஆண்டு
தேசிய விருது :-
1. சங்கராபரணம் - தெலுங்கு - 1979 ஆம் ஆண்டு
2. ஏக் துஜே கேலியே - இந்தி - 1981 ஆம் ஆண்டு
3. சாகார சங்கமம் - தெலுங்கு - 1983 ஆம் ஆண்டு
4. ருத்ரவீணா - தெலுங்கு - 1988 ஆம் ஆண்டு
5. சங்கீத சாகரா கணயோகி பஞ்சக்ஷரா காவாய் - கன்னடா - 1995 ஆம் ஆண்டு
6. மின்சார கனவு - தமிழ் - 1996 ஆம் ஆண்டு
தமிழக அரசு விருது :-
1. அடிமைப்பெண், சாந்தி நிலையம் - சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது - 1969 ஆம் ஆண்டு
2. நிழல்கள் - சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது - 1980 ஆம் ஆண்டு
3. கேளடி கண்மணி - சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது - 1990 ஆம் ஆண்டு
4. ஜெய் ஹிந் - சிறந்த பாடகருக்கான தமிழக அரசு விருது - 1994 ஆம் ஆண்டு
5. ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக 1981-ஆம் ஆண்டு கலைமாமணி விருது பெற்றார்.