சென்னை:பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று வழங்கப்படும் நிலையில்,
சான்றிதழ்களை லேமினேஷன் செய்வது குறித்து, தேர்வுத்துறை விளக்கம் அளிக்க
வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக பள்ளி கல்வி பாட
திட்டத்தில் படித்த, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, மார்ச்சில்
பொதுத்தேர்வு நடந்தது. இதில், தேர்வு முடிவுக்கு பின், மாணவர்களுக்கு
தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.அதன் அடிப்படையில்,
கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,
மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், இன்று முதல் வழங்கப்படும் என,
அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மதிப்பெண் சான்றிதழை பெறும் மாணவர்களில் பலர், லேமினேஷன் செய்ய நினைக்கின்றனர். அனைத்து இடங்களிலும், லேமினேஷன் செய்த சான்றிதழ்களை பெற்று கொள்வதில்லை என்பதால், இதுகுறித்து தெளிவான விளக்கத்தை, தேர்வுத்துறை வழங்க வேண்டும் என, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.