சென்னை:'பண்டிகை கால முன்பணத்தை நிபந்தனையின்றி, பணமாக வழங்க வேண்டும்' என,
மத்திய பாதுகாப்பு துறை ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தி
உள்ளது.சம்மேளனத்தின் பொதுச் செயலர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை என்ற பெயரில்,
பண்டிகை கால முன்பணம் மற்றும் எல்.டி.சி., பயணச் சலுகை
அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கவும், ஜி.எஸ்.டி., வரி
வசூலிக்கவும், இத்தகைய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.பண்டிகை
முன்பணமாக, 10 ஆயிரம் ரூபாய், 10 தவணைகளில் பிடித்தம் செய்யப் படும்; அது,
'ரூபே பிரீபெய்டு' கார்டு வாயிலாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் மத்தியில் பணம் சென்றடைய வேண்டும் என்பது, அரசின் நோக்கமாக இருந்தால், நிபந்தனையின்றி பண்டிகை முன்பணம், பயணச் சலுகை மற்றும் விடுப்பு தொகையை, பணமாக வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.