மருத்துவ கல்லூரியில்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான
மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கலாமா, வேண்டாமா என்பது குறித்து கவர்னர்
பன்வாரிலால் புரோகித், சட்ட நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து
காலதாமதம் ஏற்படுவதால் அரசு பள்ளி மாணவர்கள் கனவு இந்தாண்டு நிறைவேறுமா
என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில்
வெற்றிபெறும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீதம்
உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த
16ம் தேதி நிறைவேற்றப்பட்டது.