பள்ளிகளை திறக்க தற்போதைக்கு சாத்தியக்கூறுகள் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம் :
பள்ளிகளை திறப்பதற்கு தற்போதைக்கு சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் லக்கம்பட்டி பேரூராட்சியில் ஒரு கோடியே 79 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட அவர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.