அழகான பணக்காரி.... ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்.
ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள்.
அவரிடம்...
"என் வாழ்க்கையே ஒரு சூனியமாக இருக்கு".....!!
"எவ்வளவோ செல்வம் இருந்தும் வெறுமையாக உணர்கிறேன்"....!!
அர்த்தமே இல்லாமல்..... ,
இலக்கே இல்லாமல்......,
"வாழ்க்கை இழுக்கிறது"....!!
"என்னிடம் எல்லாமே இருக்கிறது"......!!
இல்லாதது........,,,
" நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே ".......!!
என் சந்தோசத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்.
கவுன்சிலிங் செய்பவர்....
"அவரின் அலுவலகத்தை சுத்தம் செய்யும் ஒரு பணி பெண்ணை அழைத்தார்".....!!
அவர் அந்த பணக்கார பெண்ணிடம்.....,
"நான் இப்பொழுது என் வேலைக்காரப் பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது "......
என்று சொல்லச் சொல்கிறேன்..
"நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் "...... என்றார்.
பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு.......,
ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்..
"என் கணவர் மலேரியா காய்ச்சலால் இறந்தார்"....!
அடுத்த மூன்றாவது மாதம்.....
"என் மகன் ஒரு விபத்தில் இறந்து போனான்".....!!
"எனக்கு யாரும் இல்லை"....!!
"எதுவும் இல்லை"....!!
"என்னால் உறங்க இயலவில்லை"......!!
"சாப்பிடக்கூட முடியவில்லை"......!!
"யாரிடமும் மனது விட்டு பேச"...,
"சிரிக்கவும் முடியவில்லை"....!!
"என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்"...... !!
"ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழது".....,
"ஒரு பூனை என்னை பின் தொடர்ந்து வந்தது"...... !
வெளியே சில்லென்று..... "மழை பெய்துக்கொண்டு இருந்தது ".......!!
"எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது".......!!
"அந்த பூனையை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன்"..... !!
மழையால் மிகவும் குளிராக இருந்ததால்.....,
"நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன்"......!!
அது அத்தனை பாலையும் குடித்து விட்டு.....,
"என் கால்களை அழகாக வருடிக் கொடுத்தது".......!!
கடந்து போன 3 மாதத்திற்கு பிறகு......,
"நான் முதல் முதலாக புன்னகைத்தேன்......!!
நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன்.
ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷயம் என்னை சந்தோசப்படுத்துகிறது.........என்றால்.....
ஏன் இதை பலருக்கும் செய்து .....
"நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது"..... என யோசித்தேன்.
அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் பக்கத்து வீட்டு பாட்டிக்கு......,
"உண்பதற்கு சூடான கஞ்சி செய்து கொடுத்தேன்"...... !!
அந்த பாட்டி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
"பாட்டியை மகிழவைத்து நான் மகிழ்ந்தேன்".....!!
இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு சிறு, சிறு, உதவி செய்து........,
"அவர்கள் மகிழ நானும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்".....!!
இன்று என்னை விட.... ,
நிம்மதியாக உறங்கவும்.....,
உணவை ரசித்து உண்ணவும்....... ,
"யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்".....!!
மகிழ்ச்சி என்பது........,
"அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது".......,
என்பதை கண்டு கொண்டேன்.
இதை கேட்ட அந்த பணக்கார பெண் விசும்பி, விசும்பி அழுதாள்.
அவளால் பணம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது.
ஆனால் பணத்தால் வாங்க முடியாத ஒரு விஷயம்......
மகிழ்ச்சி.
"அது அவளிடம் இல்லை"......!!
வாழ்க்கையின் அழகு என்பது....... ,
"நீங்கள்
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீா்கள்
என்பதில் இல்லை".....!!
உங்களால்..... ,
"அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி ஆகிறார்கள்
என்பதிலேயே இருக்கிறது".....!!
"மகிழ வைத்து மகிழுங்கள்"...!!
"இந்த உலகமும் , இறைசக்தியும் உங்களை கண்டு மகிழும்"......!!
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மகிழ வைத்து வாழுங்கள். "மகிழ வைத்து மகிழுங்கள்"...!! Moral Story:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |