காலை உணவு என்பது ஒருநாளின் ஆரோக்கியமான தொடக்கத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட தேவையான ஆற்றலை வழங்குவது காலை உணவுதான். எனவே எக்காரணத்தை முன்னிட்டும் காலை உணவை தவிர்ப்பது என்பது கூடாது. காலை உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு என்ன உணவை காலை உணவாக எடுத்துக்கொள்கிறோம் என்பதும் முக்கியம்.
ஆரோக்கியமற்ற காலை உணவை உண்பதைப்போலவே சரியான காலை உணவை உண்ணாததும் உங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதேசமயம் காலை உணவிற்கு முன்னர் நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் காளி உணவிற்கு முன்னர் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சில உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும்.
வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம், பைபர் மற்றும் மக்னீசியம் உள்ளது, இதனால்தான் இதனை காலை உணவிற்கு முன் சாப்பிடக்கூடாது. அதிகளவு மக்னீசியம் இதை கோளாறுகளை உண்டாக்கக்கூடும்.
காலை உணவிற்கு முன் பேரிக்காய் சாப்பிடுவது உங்கள் வயிற்றின் உட்புற சதைகளை பாதிக்கக்கூடும், அதற்கு காரணம் அதிலுள்ள அதிகளவு பைபர். வயிற்றின் உட்புற சவ்வானது மிகவும் மென்மையானது. இதனால் அதிகளவு பைபரை தாங்க இயலாது. காலை உணவுக்கு முன் பேரிக்காய் சாப்பிடுவது அல்சரை உருவாக்கும்.
கேக்குகளில் செறிவூட்டப்பட்ட ஈஸ்ட் இருப்பதால் இதனை காலை உணவிற்கு முன் சாப்பிடுவது நல்லதல்ல. இது வயிற்றின் உட்புற சதைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இதில் உள்ள அதிகளவு சர்க்கரை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளபடும்போது அது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஜாமில் உள்ள சர்க்கரை மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் சமநிலையை பாதிக்கும். எனவே காலை உணவிற்கு முன் ஜாம் சாப்பிடுவது நல்லதல்ல. காலை உணவாக பிரட் மற்றும் ஜாம் சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாக இருக்கிறது. அதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது