
சென்னை திருவல்லிக்கேணியில் மரம் முறிந்து விழுந்து உயிரிழந்தவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டதுடன் முதியவர் மீது மரம் முறிந்து விழும் அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நிவர் புயல் காரணமாக சென்னை உட்பட பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.மேலும் நிவர் புயலால் மின்கலங்கள் முறிந்து விழுந்தும் , மரங்கள் முறிந்தும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை திருவல்லிக்கேணியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து 50 வயது மதிக்கத்தக்க நபர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.பலத்த சூறைக்காற்று காரணமாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டாக்டர் பெசன்ட் சாலையில் மரம் முறிந்து விழுந்ததாகவும் ,அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் மீது மரம் விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டது.உயிரழந்தவர் யார் என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது .
https://twitter.com/i/status/1331815699686125570
உயிரிழந்தவர் திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்த ராஜா (50) என்பதும் ,அவர் ஜாம்பவான் மீன் மார்க்கெட்டில் பணியாற்றுபவர் என்பதும் தெரிய வந்துள்ளது.மேலும் மரம் முறிந்து அவரின் மீது விழும் சிசிடிவி காட்சிகள் பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும் அளவில் உள்ளது.மேலும் இந்த சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.








