உடல் நலம்... இரத்தத்தில் கொழுப்பு அதிகமாதல் (Dyslipidemia)..!! (சற்று நீண்ட கட்டுரை. ஆனால், மிகவும் பயனுள்ள பதிவு) : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


உடல் நலம்... இரத்தத்தில் கொழுப்பு அதிகமாதல் (Dyslipidemia)..!! (சற்று நீண்ட கட்டுரை. ஆனால், மிகவும் பயனுள்ள பதிவு) :


கொழுப்பு என்பது உடலுக்கு மிகவும் அவசியமான, உணவிலிருக்கும் ஒரு முக்கியமான மூலக்கூறு. ஒரு கிராம் கொழுப்பு 9 கலோரி சக்தி தரும் (கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச் சத்தானது 4லு கலோரியை மட்டுமே தரும்). கொழுப்புச் சத்தானது கொழுப்பு அமிலங்களாக (Fatty acids) கிளிசரால் ஆகவும் கிளைகோஜென் ஆகவும் சேமித்து வைக்கப் படுகிறது. இப்படியாக கொழுப்பு, உடலில் சேமித்து வைக்கும் தன்மை உடையதாகவே உள்ளது.

உடனடி எனர்ஜி தேவைக்கு அவசியமான மாவுச்சத்தை விட அதிகப்படியான மாவுச்சத்தும் (அரிசிப் பதார்த்தங்கள்) கொழுப்பாகவே சேமிக்கப் படுகிறது. அதனால், உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பது மட்டுமே பிரச்னை அல்ல. தமிழக மக்களின் உணவில் அரிசிப் பதார்த்தங்கள், பெரிய வாழைப்பழம், மாம்பழம், இனிப்பு போன்ற மாவுச்சத்து அதிகமாக இருப்பதும் இதற்குக் காரணமாகலாம். கொழுப்பு உடலுக்கு சக்தியையும் சூட்டையும் தருவது மட்டுமல்ல... சிறு உறுப்புகளையும் நரம்புகளையும் பாதுகாக்கும் உறைகளுக்கும் அவசியம். வைட்டமின்கள் A, D, E - K போன்ற முக்கிய மான வைட்டமின்கள் கொழுப்பில் கரையக் கூடியவை.

இதனாலும், கொழுப்பு மிக முக்கியமானது. அட்ரீனல் மற்றும் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கும் கொழுப்பு அமிலங்கள் மிக முக்கியமானவை. கொழுப்பில் கரையும் வைட்டமின்களை வைட்டமின் தி என்று கூறுவார்கள். இவை குறைந்தால் பலவித சரும நோய்கள், பித்தப்பை கல், தலைமுடி உதிர்தல், வளர்ச்சி குறைவு, மலட்டுத்தன்மை, சிறுநீரக ப்ராஸ்டேட் மற்றும் மாதவிடாய் பிரச்னைகள் உருவாகும். குடலில் வைட்டமின் B உருவாவதற்கும் கொழுப்புச்சத்து அவசியம். மூளையின் நினைவாற்றலுக்கும் கொழுப்பு மூலக்கூறுகள் முக்கியம்.

பழங்கள் மற்றும் வறுத்த, பொரித்த மாமிச மற்றும் பருப்புகளிலிருந்து கிடைக்கும் இந்தக் கொழுப்பு, அளவுக்கு அதிகமாகும் போது ஏற்படும் பிரச்னைகளே டிஸ்லிபிடேமியா. ஒருவரது உணவில் 65% மாவுச்சத்தும் 25% புரதச்சத்தும் 5-10% கொழுப்புச்சத்தும் இருந்தாலே போதுமானது. இவற்றோடு, காய்கறிகள், பழம், பருப்பு (ழிuts) என இருப்பதையே சமச்சீர் உணவு என்கிறோம்.

திடீர் உணவு (Fast Food), வாரக் கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப் போகாமல் இருக்கும் படி தயாரிக்கப் படும் உணவு (Frozen Food), ஹோட்டல் உணவு போலவே வீட்டுச் சமையலில் எண்ணெய் அதிகமாக்கி வறுத்தவை (Fried food), அதிகம் பொரித்த உணவுகள் (Deep Fried Food), நெய்யும் இனிப்பும் அதிகமுள்ள உணவுகள் ஆகியவையும் கூட, இப்போது பாரம்பரிய உணவு முறையிலும் ஊடுருவி விட்டது. இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவையும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து, எமனாகிறது.

மாரடைப்பு என்றவுடன் ரத்தம் கட்டியாகி இதய ரத்தக் குழாய்களில் ரத்தப் போக்கை அடைப்பது, கொழுப்புப் படிந்த குறுகலான ரத்தக் குழாய்களில் ரத்தக்கட்டி (Clot) அடைப்பதும் தோன்றும். இன்றைய இதய வல்லுனர்கள் ஒவ்வொரு நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் போதும், ரத்தக் குழாய்களை ‘டை’ அடித்தும், எக்ஸ்ரே, கதிர்வீச்சின் மூலம் அடைப்பையோ, குறுகலான இடங்களையோ ஆஞ்சியோகிராம் ( Angiogram ) மூலம் பார்த்து, அதிக கொழுப்பினால் ஏற்படும் அபாயங்களை கண்கூடாக உறுதி செய்துள்ளார்கள். Coronary Angiography, OCT Infrared Light, Optical Coherence Tomography போன்ற பரிசோதனைகளில் கொழுப்பினால் ரத்தக் குழாய்கள் எவ்வாறு குறுகுகின்றன என்பது தெளிவாகிறது.

கொழுப்பு உடலில், ரத்தத்தில் அதிகமாக இருப்பதையே டிஸ்லிபிடேமியா என்கிறோம். கொழுப்பு, ரத்தத்தில் Lipoproteins எனப்படும் பல்வேறு கொழுப்பு மூலக்கூறுகளால் ஆன கொழுப்பு வகைகளாக பிரிக்கப் படுகிறது. லைப்போபுரோட்டீன்கள் நீரில் கரைவதற்கும், உடலின் எல்லா பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதற்கும் எளிதானவை.

மூப்பு, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, டிஸ்லிபிடேமியா போன்ற பிரச்னை களாலும் ரத்தக் குழாய்களின் பரப்புகளில் ஏற்படும் விரிதல்கள், உடைதல்களால் பல்வேறு லைப்போபுரோட்டீன்கள், நீர் நிலைகளில் நிற்கும் பாசி போல, Atherosclerosis எனும் கொழுப்புக் கட்டிகளாகப் படர்வதால், ரத்தக் குழாய்களில் சுருக்கம் ஏற்படுகிறது.லைப்போபுரோட்டீன்களை நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு எனப் பிரிக்க முடியும்.

1. Triglycerides..

N < 150 ஈரலிலோ, கொழுப்பு நிறைந்த உணவிலிருந்தோ, உடலுக்குக் கிடைக்கும் டிரைகிளிசைரைடு, க்ஷிலிஞிலி, லைப்போபுரோட்டீனுடன் இணைந்து உடலின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ரத்தக் குழாய்களில் மாற்றத்தை ஏற்படுத்தும்... முக்கியமாக இதய ரத்தக்குழாய்களில்!

2 . LDL (Low Density Lipid)..

லைப்போபுரோட்டீன் மூலக்கூறுகளின் எடையைப் பொறுத்து, LDL (Low Density Lipoprotein), VLDL (Very Low Density Lipoprotein), HDL (High Density Lipoprotein) எனப் பிரிக்கிறோம். லிஞிலி எனப்படுபவை, பல்வேறு புரதங் களாலும் (லைப்போபுரோட்டீன்) ஆன கொழுப்பு மூலக்கூறுகளை தண்ணீரில் கரையும் வண்ணம், ரத்தத்தில் எடுத்துச் செல்லும் கொழுப்பு மூலக்கூறாகும். ரத்தக்குழாய்களில் கொழுப்பு மிக அதிகமாக பரவ வழி ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதால் இதை கெட்ட கொழுப்பு என்பர்.

3 . VLDL (Very Low Density Lipid) VLDL..

எளிதாக LDலிலாக மாறிவிடும். VLDL, டிரைகிளிசரைடு போன்ற லைப்போபுரோட்டீன்களை மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லும்.

4 . HDL (High Density Lipid)..

> 40 HDL மூலக்கூறுகள் கொழுப்பை செல்களிலிருந்தும், ரத்தக்குழாய் சுவர் திசுக்களிலிருந்தும், ரத்த ஓட்டத்தின் மூலம் வெளியே எடுத்துச் செல்லுவதால், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படராமல் பார்த்துக் கொள்கிறது. அதனால் தான், இது நல்ல கொலஸ்ட்ரால் எனப்படுகிறது. இந்தியர்களுக்கு இது குறைவான அளவில் இருப்பதுதான் பிரச்னையே. இதைக் கூட்டும் ஒரே வழி - உடற்பயிற்சி மட்டுமே. வேறு எதனாலும் முறையாகக் குறைக்க முடியாது.

Total Cholesterol..

முன்பெல்லாம் 220க்குக் குறைவாக ‘டோட்டல் கொலஸ்ட்ரால்’ என்பதை மட்டுமே அளவீடாகக் கொண்டு, ‘கொழுப்பு அதிகமா’ என்பதைச் சொல்லி வந்தோம். இப்போதோ, LDL , VDL, HDL ஆகிய 3 அளவுகளையும் உள்ளடக்கியதே கொலஸ்ட்ரால் என்பதால், இதில் எது அதிகம் என்பதைப் பொறுத்து, அதற்கு என்ன மருந்து தரவேண்டும், அது அதிகமாக இருந்தால் என்ன தீங்கு செய்யும் என்பதை அறியத் தருகிறோம். அதனால், Lipid ProfileTest மூலம் மட்டுமே உடலில் கொழுப்புச்சத்து அறிந்து மருத்துவம் தரப்படுகிறது.

மொத்தத்தில், HDL 40க்கு அதிகமாக இருக்க வேண்டும். இது உடற் பயிற்சியினால் மட்டுமே சாத்தியம். உணவினாலோ, மருந்தின் மூலம் மட்டுமோ சாத்தியமில்லை. Total holesterol,Triglyceride, LDL , VLDL ஆகியவை கட்டுபாட்டுக்குள் வர உணவுடன் உடற்பயிற்சி மிக மிக அவசியம். இவை அதிகமாவதற்கு பாரம்பரியம் ஒரு காரணம்.

இருந்தாலும், ஒவ்வொரு நாள் உணவிலும் 5 சதவிகிதம் கொழுப்பு, நிறைய காய்கறிகள், குறைவான அளவில் பழம் ஆகியவை அவசியம். மிகக்குறைவான ஆல்ஹகால் மற்றும் தவிர்க்கப்பட்ட புகைப்பழக்கம் ஆகியவை நல்லது. எடை குறைப்பு மற்றும் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்,சரியான கட்டுப்பாடு என்பது மிக அவசியம்.

LLA Lipid Lowering Agents அல்லது Statins எனப்படுபவை கொழுப்பையும் அதன் மூலக்கூறுகளையும் குறைக்கும் மருந்துகள். ஸ்டாடின்ஸ் காளான்களிலிருந்து எடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட மருந்து. இப்போது வேதியியல் பொருட்களாக உற்பத்தி செய்யப்படுகிறது. Atorvastatin Rosuvastatin மருந்துகள் கொலஸ்ட்ரால்களைக் குறைக்கும். இவை கொலஸ்ட்ரால் உற்பத்தியைக் குறைப்பதுடன், VLDலியைக் குறைத்து, அதன்மூலம் லிஞிலி உற்பத்தியையும் குறைக்கும். ஸ்டாடின்கள் ரத்தக் குழாய்களில் ஏற்படும் விரிவுகள், பிளவுகளையும் சரி செய்து, கொழுப்பு படர்வதையும் தடுக்கின்றன.

ஸ்டாடின்களின் பக்கவிளைவாக கண் பாதிப்புகளோ, நரம்பு மண்டல பாதிப்புகளோ, ஈரல் பாதிப்போ, தசைகளில் பாதிப்போ வரக்கூடும். அதனால், ஸ்டாடின் மருந்துகள் உட்கொள்ள ஆரம்பித்தவுடன் பாதிப்புகளைக் கண்காணித்து, மருத்துவரிடம் கூறி, தேவையான பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியம்.ஃபிப்ரேட்ஸ் ( Fibrates) மருந்துகளால் டிரைகிளிசரைடு குறைக்கப்படுகிறது. டிரைகிளிசரைடு உற்பத்தியையும் குறைத்து, டிரைகிளிசரைடு, லைப்போபுரோட்டினையும் உடைத்து, அளவைக் குறைக்கும் சக்தி வாய்ந்தது இது. டிரைகிளிசரைடு குறையும்போது HDL கூடுவதற்கான வாய்ப்பு உண்டு. மிக அதிகமான அளவில் டிரைகிளிசரைடு கூடி இருப்பதை Hypertriglyceridemia என்கிறோம். இதற்கு ஸ்டாடின் மற்றும் ஃபிப்ரேட்ஸ் சேர்த்து தரப்படுகிறது. ஃபிப்ரேட்ஸில் மிகக் குறைவான பக்க விளைவுகளே உண்டு.

40 வயதுக்கு மேலே வரும் பருமன் (Obesity), நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, கொழுப்பு ரத்தத்தில் அதிகமாவது ஆகியவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தாலே போதும். மருந்துகளுடன், மருத்துவர் ஆலோசனையுடன் ஒவ்வொருவருக்குமான பரிசோதனை விவரங்களுடன் அந்தந்த நோய்க்கான நம்பர்களை கட்டுப்பாட்டுக்குள் (GOAL) வைத்திருப்பதே இதற்கு வழி. 80 வயது வரை மற்ற நோய்கள் வராத, வந்த நோய்கள் நம்மை முடக்கிப் போடாத வாழ்க்கை நடைமுறை மாற்றங்களே (Life Style Modification) நம்மை வாழ வைக்கும்.

நோய் என்று வருமுன்பே பூமியிலே கால் பதியுங்கள்... சுத்தமான காற்றைச் சுவாசித்து, மற்ற மனிதர்களையும் நேரில் கண்டு, உடற்பயிற்சி செய்யுங்கள்... உடல் அசைவே உயிர்!

பகிர்வு

💙🧡💙🧡💙🧡💙🧡💙🧡💙🧡
[22/11, 14:59] Mvkm Er Mohan: தலைக்கு தலையணை வைத்து தூங்கலாமா ?

👉 இன்றைய சூழ்நிலையில் பலருக்கு தலையணை இல்லாத தூக்கம் என்பது உப்பில்லாத உணவு போலதான் அவ்வளவு கஷ்டமாக இருக்கும்.

👉 தலையணை வைத்து உறங்குவது என்பது நமது உடலுக்கு சுகமானதாக இருந்தாலும், அது நமது உடலுக்கு தீங்கானது என சொல்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

👉 தலையணை வைத்து உறங்கும் பழக்கம் என்பது ஆதி வாசிகளிடமோ, அதன் பின்னர் வந்தவர்களிடமோ இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

👉 சாயும்போதும், உட்காரும்போதும் ஏதேனும் ஒன்றை ஒத்தாசையாக வைத்து, அதில் ஒருவித சுகத்தைக் கண்டு, அப்படியே மிருதுவான தடிமனான பொருட்களைத் தலைக்கு வைத்துத் தூங்குவது வழக்கமாகியிருக்கிறது.

👉 நாம் நடக்கும்போது எப்படி உடலை நேராக வைத்து நடக்கிறோமோ, அதுபோலத்தான் உறங்கும் போதும், மேடு பள்ளம் இல்லாத சமமான தரையில் நேராகப் படுத்து உறங்க வேண்டும்.

👉 அப்படிப்படுக்கும் போது, எக்காரணத்தைக் கொண்டும் குப்புறப்படுத்து உறங்கக்கூடாது. வானத்தைப் பார்த்துதான் தூங்க வேண்டும்.

👉 மெத்தையில் படுப்பது, பஞ்சு நிரப்பிய மிருதுவான தலையணையை தலைக்கு வைப்பது ஆகியவற்றால், கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானம் அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

👉 அதுமட்டுமல்லாமல் கழுத்து நரம்புகளும் பாதிக்கப்படும். அதனால், மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டு மூளை பாதிப்புகளில் தொடங்கி பலவிதமான பிரச்சனைகளுக்கு அது வழிவகுக்கிறதாம்.

👉 என்னால் தலையணை இல்லாமல் ஒருநாளும் தூங்க முடியாது என்பவர்கள், தலையணையை தலைக்கு மட்டும் வைக்காமல், தோள்பட்டையிலிருந்து தலை முழுவதற்கும் வைப்பது நல்லது.

👉 நாம் தான் தலையணைக்கு அடிமையாகிவிட்டோம். அதனால், முடிந்தவரை தலையணை பயன்படுத்துவதைக் குறைத்து, தலையணை இல்லாமல் சமமான தரையில் உறங்க பழகிடுவோம்.

👉 அதுமட்டுமல்லாமல், தலையணை வைத்து தூங்குவது நல்லதில்லை என்பதை அடுத்த தலைமுறையினருக்கு அழுத்தமாகச் சொல்லி அவர்களின் ஆரோக்கியத்திற்கு வித்திடுவோம்.
[22/11, 15:00] Mvkm Er Mohan: வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?...!!


#நெஞ்சுஎரிச்சல்போகணுமா?

ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை….! மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!

#சதை_குறையணுமா?

வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்...!

#காலையில்சரியாகமலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா?

எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்” என்று புலம்புவது கேட்கிறது!)...!

#உடம்பு_வலிக்கிறதா?

உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்...!

#கால்பாதங்கள்வலிக்கிறதா?

எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்...!

#மூக்கு_அடைப்பா?

மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி! வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்...!

#வெயிலில் அலைந்து தாகம் எடுக்கும் போதுவெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்...!

திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்...!

#ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு

அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்...!

#தரையை_துடைக்கும் போது

அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்...!

#திடீரென்றுகடுமையானதலை_வலியா?

தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்....!

#சுறுசுறுப்புக்குசுக்குவெந்நீர்’

தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.சென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி (micro family) எனப்படும் 3 அல்லது 4 பேரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம். விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H