32 மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக 39 மாவட்டங்கள் ஆக உயர்த்தப்பட்டது மட்டுமன்றி வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டும் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கு போதுமான அரசு ஊழியர்கள் இல்லாத நிலையை தமிழக அரசு உணர்ந்து இருக்கக்கூடிய இந்த தருணத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இல்லாத அளவுக்கு கணிசமாக உயர்ந்துள்ளது.
இதுவரை எந்த ஒரு மாநில போட்டித்தேர்வு ஆணையமும் வெளியிடாத மிகப்பெரிய அதாவது எவரும் கனவில் கூட நினைக்காதது அளவுக்கு காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வு ஆணையம் வருகின்ற ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டு ஏப்ரல் மாதம் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஊடகம் வாயிலாக செய்திகள் தற்சமயம் வெளிவந்த வண்ணம் உள்ளது,இச்செய்தி முற்றிலும் உண்மையானது மிகமிக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி நமக்கு கிடைக்கப் பெற்றிருக்கிறது
2021 வருகின்ற ஜனவரி மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு உறுதியாக வெளிவர உள்ளது









