மருத்துவ கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ்
மருத்துவ கல்லூரி கலந்தாய்வில் கடந்த 7ஆம் தேதி கலந்துகொண்ட ராமநாதபுரம்
மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அளித்த சான்றிதழில் சந்தேகம் எழுந்ததால்
அது குறித்து மருத்துவ கல்லூரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்
விசாரணையில் மாணவி அளித்தது போலியான மதிப்பெண் சான்றிதழ் என தெரியவந்தது. இதனையடுத்து அந்த மாணவி மீதும் அவரது தந்தை மீதும் மருத்துவ இயக்குனர் கல்வி இயக்குனரக கூடுதல் இயக்குனர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மாணவி மற்றும் அவரது தந்தை ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன









