🛑நாடு முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் முதல் ‘புதிய ஊதிய விதி’ அமலுக்கு வர உள்ளது. இதனால் தொழிலாளர்களின் மாதச் சம்பளம் 4 முதல் 10 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
🛑புதிய ஊதிய விதி:
ஏப்ரல் 1, 2021 முதல் புதிய ஊதிய விதி அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகள் தொழிலாளர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. இதில் முதலாவதாக மாதச் சம்பளம் குறையும் நிலை ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய நடைமுறை 4 சட்டங்களை உள்ளடக்கியது. இந்த மசோதா கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக அமலபடுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
🛑இந்த புதிய ஊதிய விதி ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தால் ஏற்படும் சாதக, பாதகங்களை பார்க்கலாம். இதன்படி தொழிலாளர்களின் சம்பளம் 50% அளவுக்கு உயர்த்தப்பட்டு, படி 50 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். இதனால் சமூக பாதுகாப்பு விதிகளின் படி டிப்படை ஊதியத்தில் 12% அளவுக்கு நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்திற்கு செலுத்த வேண்டும். இதனால் தொழிலாளர்களின் மாதச் சம்பளம் 4 முதல் 10 சதவீதம் வரை குறையும்.
🛑இதனை சரிசெய்ய வேண்டும் என்றால் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களின் சம்பள வரைமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் உயர் வருவாய் பிரிவினர்க்குக்கு இதனால் எவ்வித பாதிப்புகளும் கிடையாது. எனவே ஒரு பிரிவை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Thursday, 21 January 2021
Home
EDNL NEWS
புதிய ஊதிய விதி’ ஏப்ரல் 2021 முதல் அமல் – தொழிலாளர்களின் மாதச் சம்பளம் குறையும் அபாயம்!!
புதிய ஊதிய விதி’ ஏப்ரல் 2021 முதல் அமல் – தொழிலாளர்களின் மாதச் சம்பளம் குறையும் அபாயம்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...