
இந்நிலையில், ஏற்கனவே இந்தியாவில் ஆஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முதற்கட்ட சோதனைகள் நடந்து வரும் சூழலில், மற்றொரு கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கோவேக்சின் தடுப்பூசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,
இதுவரை நடத்தப்பட்ட சோதனை முடிவுகளில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என தெரியவந்துள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது." என்று இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.