இந்நிலையில், இந்திய பொருளாதாரத்தை மீட்கும் வழி சுயசார்பு திட்டம் தான் இந்தியா - ஆத்மநிர்பார் பாரத் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், விநியோக சங்கிலி முதல் உற்பத்திவரை பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவிவையும் புதுப்பிக்க இந்த நிதித்திட்டம் உதவும். உள்நாட்டுத் தயாரிப்புகளை வாங்கவும், ஊக்குவிக்கவும் வேண்டும். மக்கள் உள்நாட்டுத் தயாரிப்புக்கு குரல் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் முடங்கியுள்ள வர்த்தக செயல்பாடுகளுக்கு தேவையான ஊக்கத்தை ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் மூலம் அளிக்க முடியும். இதற்கு மேக் இன் இந்தியா திட்டம் மூலம் உற்பத்தியை அதிகரிப்பது, குறைந்த தொழில்நுட்பப் பொருட்களை பிறநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு மாற்றாக, குறைந்த விலையில் கிடைக்கும் உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுய சார்ப்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் உற்பத்தியாகும் பொருட்களை அதிகரிக்கும் வகையில், நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, அரியலூரில் முந்திரி, செங்கல்பட்டில் மீன், கோவையில் தேங்காய், சேலம் மற்றும் கிருஷ்ணகிரியில் மாம்பலம், ஈரோட்டில் மஞ்சள் மற்றும் தர்மபுரியில் சிறுதானியங்கள் உற்பத்தி செய்ய நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.