மலச்சிக்கல் உள்ளவர்கள் சீத்தாப்பழத்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகிவிடும். சிறிது வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து, சீத்தாப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர, குடற்புண் விரைவில் குணமாகும். சிறுநீர் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், சீத்தாப்பழச் சாறுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகினால், சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கடுப்பும் நீங்கும்.
உடம்பு ஊளைச்சதை உள்ளவர்கள் தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டு வர, ஊளைச்சதை வெகுவாக குறையும். சீத்தாபழம் உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.உஷ்ணத்தால் ஏற்படும் மாந்தத்தைக் குணப்படுத்தும் தன்மை இப்பழத்திற்கு உண்டு.
மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சீத்தாப்பழத்தை தினமும் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைவில் நல்ல மாற்றம் ஏற்படும். இரவில் படுக்கப் போகும் முன் ஒரு சீதாப்பழத்துடன் இரண்டு பேரீச்சம் பழமும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும்.