IFHRMS வந்த பிறகு பணப்பலன் மட்டுமே விரைவில் கிடைக்கிறது. பணியை தான் விரைவாக முடிக்க முடியவில்லை அதனுடன் போராடும் பட்டியல் தயார் செய்யும் பணியாளர்கள் நிலைமை பரிதாபம். அலுவலக நேரம் காலை 10 முதல் மாலை 5.45 வரை என்றால் பட்டியல் தயார் செய்யும் நேரமும் அதுவாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் ஏகப்பட்ட தடைகள் தொழில்நுட்ப கோளாறுகள் என இயங்குதளமே சரிவர இயங்குவதில்லை. அப்படியே இயங்கினாலும் 30 நிமிடம் அல்லது 1 மணி நேரம் இடையில் மின்தடை போல் இடை இடையே இயங்குவதில்லை. 10 முதல் 2 வரை பின்பு 2 முதல் 6 வரை என்று பிரித்து பிரித்து மாவட்டத்திற்கு நேரம் ஒதுக்குகிறார்கள். அந்த குறிப்பிட்ட நேரத்திலாவது முழுமையாக website இயங்குகிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள்ளும் இடை இடையே ஏகப்பட்ட தடைகள். பட்டியல் முழுமையாக தயார் செய்ய இரவு 10 மணி 12 மணி அதிகாலை 4 மணி 5 மணி என கணக்கே இல்லாமல் ஓய்வு நேரங்களில் கூட கண்விழித்து தூக்கத்தை தொலைத்து மன உளைச்சலில் பட்டியல் தயார் செய்யும் நிலை உள்ளது. இதனால் குடும்பத்தை கவனிக்க நேரத்தை செலவிட முடியவில்லை. அலுவலக நேரத்தில் தானே அலுவலகம் சார்ந்த பணியை செய்ய முடியும். வீட்டிலும் அதையே செய்தால் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுவது எப்போது? Wipro அலுவலகத்திலும் இப்படி தான் அவர்களுடைய இயங்குதளம் இயங்குமா? எந்த பணியையும் விரைவாக முடிக்க முடியாமல் எல்லாவற்றிலும் error வந்து கொண்டு இருக்குமா? கால தாமதம் எப்போதும் ஆகுமா? பணி செய்யும் போது அலுவலக நேரத்தில் மட்டுமே அலுவலக பணியை செய்வோம் இதர நேரத்தில் செய்ய மாட்டோம் என எப்பொழுது ஒன்றாக குரல் தருகிறமோ அப்போது தான் இதற்கு தீர்வு கிடைக்கும். இல்லையேல் இதே நிலை தான் நீடிக்கும் நமக்காக கேட்பாரில்லை. பட்டியல் தயாரிக்கும் போது எந்த errorம் வராமல் பில் ஜெனரேட் செய்தவுடன் உடனே ஜெனரேட் ஆகவும் இயங்குதளம் அலுவலக நேரத்தில் முழுமையாக இயங்கவும் Wipro நிர்வாகம் இதன்பிறகாவது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து துறை சங்க தலைமை நிர்வாகிகள் அனைவரும் தயவுசெய்து அரசிடம் இதை வலியுறுத்தி சொல்லி பணியாளர்களுக்கு பட்டியல் தயார் செய்வதில் உள்ள சிரமத்தை (Website error problem) மன உளச்சலை போக்க வேண்டும்.