2021-ல் விற்பனைக்கு வர இருக்கும் #டாப்-10 பைக்ஸ்... மிஸ் பண்ணிடாதீங்க... வருத்தப்படுவீங்க! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Sunday 7 March 2021

2021-ல் விற்பனைக்கு வர இருக்கும் #டாப்-10 பைக்ஸ்... மிஸ் பண்ணிடாதீங்க... வருத்தப்படுவீங்க!

சிங்கிள் டீ குடிக்கவே நல்ல கடை தேடும்போது, நம் கூடவே லைஃப் லாங் மிங்கிள் ஆகப்போகிற பைக்ஸைத் தேர்ந்தெடுப்பது என்பது எவ்வளவு முக்கியம்.


ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350

உத்தேச விலை: ரூ.1,80,000

ரிலீஸ்: ஜூன் 2021

இன்ஜின்: 349 சிசி, சிங்கிள் சிலிண்டர்

சிறப்புகள்: ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், டூயல் சேனல் ஏபிஎஸ்

கடந்த ஆண்டில் மட்டும் 3.98 லட்சம் க்ளாஸிக் புல்லட்டுகளை விற்றுத் தீர்த்துவிட்டது ராயல் என்ஃபீல்டு. அதற்குக் காரணம், RE என்கிற பிராண்ட் வேல்யூவும், அதன் கெத்தும்தான். இன்னும் க்ளாஸிக்கை கனவு பைக்காக நினைப்பவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட க்ளாஸிக்கை ஃபேஸ்லிஃப்ட் செய்யாவிட்டால் எப்படி? 2021–க்கான க்ளாஸிக் 350 புல்லட்டின் மேம்படுத்தப்பட்ட மாடலைக் களமிறக்க இருக்கிறது ராயல் என்ஃபீல்டு. பழைய புல்லட்டில் இருந்து கொஞ்சம் சொகுசான பில்லியன் சீட், க்ரோம் ஃபினிஷுடன் கூடிய ஹெட்லைட் (இனிமேல் வெளிமார்க்கெட்டில் பொருத்த வேண்டியதில்லை), வலதுபுறத்துக்கு ஷிஃப்ட் ஆகியிருக்கும் டிஸ்க் பிரேக்குகள், மீட்டியாரில் இருக்கும் க்ரேடில் ஃப்ரேம், ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், டூயல் சேனல் ஏபிஎஸ் எனக் கலக்க இருக்கிறது புது க்ளாஸிக் 350. விலைதான் புல்லட்டின் USP. எனவே, அதில் கவனமாகவே இருக்கும் ராயல் என்ஃபீல்டு. இப்போது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடல் புல்லட்டின் விலை 1.65–ல் இருந்து ஆரம்பிக்கிறது. எனவே, இது சுமார் 1.80 லட்சத்துக்கு மேல் பொசிஷன் செய்யப்படலாம். என்ன, மீட்டியார்போல் ஸ்டைலிஷ் ஆன அலாய் வீல்களையும், ட்யூப்லெஸ் டயர்களையும் கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்கள் புல்லட் பிரியர்கள்? அதேபோல், மீட்டியார் மாதிரி MIY (Make It Yourself) ஸ்கீமுக்குக் கீழ் இதைக் கொண்டு வந்தால், நாம் விரும்பும் வண்ணங்களில், விரும்பும் ஸ்டைலில், க்ளாஸிக்கை மாடர்ன் ஆக்கிக் கொள்ளலாம்!

TVS Zeppelin

டிவிஎஸ் ஜெப்பலின் R

ரிலீஸ்: ஆகஸ்ட் 2021

இன்ஜின்: 220 சிசி

உத்தேச விலை: ரூ.1,60,000

சிறப்புகள்: லித்தியம் அயன் பேட்டரி, ஹைபிரிட் கார்களில் இருக்கும் ISG (Integrated Starter Generator)

பஜாஜின் டொமினாருக்குத்தான் எத்தனை போட்டி? டிவிஎஸ் நிறுவனம், 2018 ஆட்டோ எக்ஸ்போவிலேயே ஜெப்பலின் R பைக்கைக் காட்சிப்படுத்தியிருந்தது. இது ஒரு ஹைபிரிட் பைக் என்பதுதான் இதன் மிகப் பெரிய ஸ்பெஷலே! மாருதி சுஸூகியின் ஹைபிரிட் கார்களில் இருக்கும் ISG (Integrated Starter Generator) e-Boost என்று படா தொழில்நுட்பங்களை இந்த பைக்கில் புகுத்தியிருக்கிறது டிவிஎஸ். கூடவே, 48V கொண்ட லித்தியம் அயன் பேட்டரி இருப்பதும் ஸ்பெஷல். 1,200W ரீ–ஜெனரேட்டிவ் மோட்டார் இருப்பதால், இதன் பர்ஃபாமன்ஸ் சூப்பராக இருக்கும். பல்ஸர் 220F–க்கு இணையாக இதன் பவர் 20bhp-யும் 1.85kgm டார்க்கும் இருந்தது. இதன் எடையும் கொஞ்சம் அதிகம்தான்; 168 கிலோ என்கிறார்கள். நீளமான வீல்பேஸ் (1,498 மிமீ) என்பதால், பைக்கின் ஸ்டெபிலிட்டியும் அம்சமாக இருக்கும். ஆட்டோ எக்ஸ்போவில் இதைக் காட்சிக்கு வைத்திருந்தபோது, பைரலி டயர்களெல்லாம் இருந்தன. ஆனால், விற்பனைக்கு வரும்போது காஸ்ட் கட்டிங்குக்காக பல விஷயங்களைக் காலி செய்தாலும் செய்யும் டிவிஎஸ்!

ரிலீஸ்: டிசம்பர் 2021

உத்தேச விலை: 1.90 லட்சம்

இன்ஜின்: 300 சிசி, லிக்விட் கூல்டு

சிறப்புகள்: டூயல் சேனல் ஏபிஎஸ், ஸ்போர்ட்டி டிசைன்

4 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ எக்ஸ்போவில் இருந்தே ‘இதோ வருது வருது’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒருவழியாக இந்த ஆண்டு மே மாதத்துக்குள் இந்த ஸ்போர்ட்ஸ் நேக்கட் பைக்கான XF3R–ஐ லாஞ்ச் செய்யவிருக்கிறதாம் ஹீரோ மோட்டோகார்ப். 300 சிசி இன்ஜின் கொண்ட இதன் சரியான பவர் தெரியவில்லை. முழுக்க முழுக்க ஓடோ/ட்ரிப்/ஃப்யூல்/டேக்கோ/ஸ்பீடோ என எல்லாமே டிஜிட்டல் மயமாக வரும் இந்த XF3R–ல் யமஹா பைக்குகள்போல், டூயல் சேனல் ஏபிஎஸ் இருப்பது பெரிய ப்ளஸ்.

அதேபோல், மோனோஷாக் சஸ்பென்ஷன் இருப்பதும், முதுகுவலி பார்ட்டிகளுக்குப் பெரிதும் துணை நிற்கும். இதற்குப் போட்டியாக பஜாஜின் டொமினார் 400–யைத்தான் நினைக்கிறது ஹீரோ. ஆனால், டொமினாரில் அதிக பவர் (27bhp), ஸ்லிப்பர் க்ளட்ச், எல்இடி ஹெட்லைட் என்று வேற லெவலில் கலக்குகிறது. அதேபோல், இதற்கு இன்னொரு போட்டியான நின்ஜா 350R–ல் இருப்பது ட்வின் சிலிண்டர். தெறி பெர்ஃபாமன்ஸில் நின்ஜாவுடன் போட்டி போட வேண்டுமென்றால், அதிக பவரும் டார்க்கும் அவசியம். ஸ்போர்ட்ஸ் நேக்கட் ஸ்டைலில் ஒரு பைக் வேண்டுமென்பவர்கள், கொஞ்சம் காத்திருக்கலாம்.

ஹோண்டா ஃபோர்ஸா 350

ரிலீஸ்: செப்டம்பர் 2021

உத்தேச விலை: 3.2 லட்சம்

இன்ஜின்: 329.6 சிசி, சிங்கிள் சிலிண்டர்

சிறப்புகள்: டிசைன், வசதிகள், டூயல் சேனல் ஏபிஎஸ், இரண்டு பக்கமும் டிஸ்க்

சில ஹோண்டா பைக்குகளை ஹோண்டா ஷோரூமில் தேடினால் கிடைக்காது. BigWing ஷோரூம்களில்தான் கிடைக்கும். அதாவது, மாருதிக்கு நெக்ஸா போல. ஹோண்டாவின் காஸ்ட்லி பைக்குகளான CB350, CBR650R, லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் CB350RS போன்றவற்றை பிக்விங்கில்தான் புக் செய்ய முடியும். ஏற்கெனவே ஹோண்டா ஃபோர்ஸா 300சிசி மேக்ஸி ஸ்கூட்டரைக் காட்சிக்கு வைத்திருந்த ஹோண்டா, போன ஆண்டில் 4 ஸ்கூட்டர்களை விற்றும் விட்டது. இப்போது அதன் அடுத்த ஹைவெர்ஷன் மாடலான 350சிசி ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டுவரவிருக்கிறது. மேக்ஸி ஸ்கூட்டர் என்பதால், எல்லாமே மேக்ஸிமம்தான். உயரமான விண்ட்ஷீல்டு, காற்று முகத்தில் அறையாமல் தடுக்கும். இரண்டு பக்கமும் டிஸ்க், டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட முதல் ஸ்கூட்டர் ஃபோர்ஸாவாகத்தான் இருக்கலாம். பூட் சைஸும் மேக்ஸிமம் இடவசதி. இரண்டு ஹெல்மெட் வைக்கும் அளவு இடம் இருக்கும். 4 வால்வ், லிக்விட் கூலிங், கொண்ட இந்த 350 சிசி ஸ்கூட்டரில், 7 ஸ்டெப் அட்ஜஸ்ட்டபிள் டூயல் ஷாக் அப்ஸார்பர்கள் இருப்பதால், ஒரு பெரிய பைக்கின் ஹேண்ட்லிங் உணர்வு கிடைக்கலாம். விலையும் கொஞ்சம் இல்லை... ரொம்ப மேக்ஸிமம்தான்.டிவிஎஸ் ஃபியரோ 125

ரிலீஸ்: அக்டோபர் 2021

உத்தேச விலை: ரூ.70,000

இன்ஜின்: 125 சிசி

சிறப்புகள்: எல்இடி ஹெட்லைட், புளூடூத் போன்ற வசதிகள்

டிவிஎஸ்–ன் விக்டரை இதுவரை BS-6–க்கு அப்டேட் செய்யவில்லை. அப்படியென்றால், விக்டரை டிஸ்கன்டினியூ செய்யும் முடிவில் இருக்கலாம். அதற்குப் பதிலாகத்தான் தனது பழைய ஃபியரோ பைக்கை, 125சிசி செக்மென்ட்டில் இறக்கி கம்பேக் கொடுக்கவிருக்கிறது டிவிஎஸ். 20 ஆண்டுகள் பின்னோக்கிப் போங்கள். அழகான ஏரோடைனமிக் கொண்ட ஸ்கூப்களோடு கும்மென்ற பெட்ரோல் டேங்க், சிங்கிள் பீஸ் ஹெட்லைட் என்று விக்டரை 20 ஆண்டுகளுக்கு முன்பு டைம் டிராவலில் போய் நினைத்துப் பாருங்கள். இப்போதைக்கு டாப்–10 விற்பனை லிஸ்ட்டில் கம்யூட்டிங் செக்மென்ட்டில் டிவிஎஸ்–ஸால் இடம் பிடிக்க முடியவில்லை. ஹோண்டா ஷைன் மற்றும் ஹீரோ கிளாமருடன் போட்டி போட நச்சென்று ஃபியரோவைக் கொண்டு வரவிருக்கிறது டிவிஎஸ். ஃபியரோ 125 பைக்கின் கான்செப்ட்டோ, டெஸ்ட் டிரைவ் படங்களோ இதுவரை சிக்கவில்லை. ஆனால், அப்பாச்சி சீரிஸ் வரிசையில் கொஞ்சம் ஸ்போர்ட்டியாகவும், என்டார்க்கின் 125 சிசி இன்ஜினுடனும், 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடனும் வரவிருக்கிறது ஃபியரோ. எல்இடி ஹெட்லைட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் வரவிருக்கும் ஃபியரோவின் விலை 70,000–க்குள் இருக்கலாம். இந்த அக்டோபருக்குள் ஃபியரோ அறிமுகம் ஆகலாம்.Royal Enfield Cruiser 600

ராயல் என்ஃபீல்டு க்ரூஸர் 600

உத்தேச விலை: ரூ.3.70,000

ரிலீஸ்: ஜூலை 2021

இன்ஜின்: 648 சிசி

சிறப்பு: ட்யூப்லெஸ் டயர்கள் உண்டு.

ராயல் என்ஃபீல்டில் இரண்டு க்ரூஸர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இன்டர்செப்டர் மற்றும் கான்டினென்ட்டல் ஜிடி – இவை இரண்டுமே 650 சிசி க்ரூஸர்கள். இதுபோக, மேலும் ஒரு க்ரூஸரைக் களமிறக்க இருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இதன் ஸ்பை படத்தைப் பார்க்கும்போது, முழுக்க முழுக்க கறுப்பு வண்ணத்தில், செம க்ரூஸிங் ஸ்டைலில் பார்ப்பதற்கு ஹார்லி டேவிட்சன் போலவே இருக்கிறது. இப்படிச் சொல்வதற்குக் காரணம் – கறுப்பு நிற அலாய் வீல்கள், ஸ்ப்ளிட் சீட்கள், இரட்டை எக்ஸாஸ்ட்கள். அப்படியென்றால்... ட்யூப் டயர்களுக்கு விடுதலையா! ஆம், இதில் இருப்பவை 18 இன்ச் ஸ்டைலிஷாக அலாய்வீல்கள். (மு:100/90–R18 – பி:130/70-R18). ஸ்பை படத்தில் இரண்டு பக்கமும் டிஸ்க் இருந்தன. அதனால், டூயல் சேனல் ஏபிஎஸ் உறுதி. அனலாக் மற்றும் டிஜிட்டல் எனக் கலந்துகட்டி இருக்கும் இதன் சென்டர் கன்சோல். முன் பக்கம் USD ஃபோர்க் இருந்தது. எனவே, ஃப்ரேமும் புதுசாகத்தான் இருக்கும். மீட்டியார் போலவே இதிலும் ட்ரிப்பர் நேவிகேஷன், MIY பேக்கேஜ் போன்றவை இருக்கும். அநேகமாக, கவாஸாகி வல்கன் S, ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 போன்றவற்றுக்கு இது வலுவான போட்டியாக இருப்பதாலோ என்னவோ, இதன் விலையையும் வலுவாகவே பொசிஷன் செய்யும் RE.கவாஸாகி நின்ஜா 300

உத்தேச விலை: ரூ. 2.75 லட்சம்

ரிலீஸ்: மே 2021

இன்ஜின்: 296 சிசி, சிங்கிள் சிலிண்டர்

சிறப்புகள்: ட்வின் சிலிண்டர் பர்ஃபாமன்ஸ், டிசைன்

3.5 லட்சத்துக்குள் இப்போதைக்குத் தெறி பெர்ஃபாமன்ஸில் ஒரு ஸ்போர்ட்டியான ஃபுல் ஃபேரிங் ஸ்கூட்டர் வேண்டுமென்றால், கவாஸாகி நின்ஜாவைத் தவிர ஆப்ஷன்கள் ரொம்பவும் குறைவு. (BMW G310R, அப்பாச்சி RR310). நின்ஜா, 0–100 கிமீயை வெறும் 6.6 விநாடிகளில் கடக்கும். இந்த வெறித்தனமான பெர்ஃபாமன்ஸுக்குக் காரணம், இதன் ட்வின் சிலிண்டர் இன்ஜின். இன்னொரு சிலிண்டர் காரணமாகவே இதன் எடையும் அதிகம். 172 கிலோ. (BS-4). ஆனாலும், ஹேண்ட்லிங்கில் பெரிய பிரச்னை இல்லை. இப்போது இதன் அப்டேட்டட் வெர்ஷன் வருகிறது. பைக்கின் தோற்றத்தில் பெரிதாக மாற்றம் இருக்காது என்கிறார்கள். மற்றபடி அதே 296 சிசி; ட்வின் லிக்விட் கூல்டு இன்ஜின் 39bhp பவரைத் தருகிறது. வழக்கம்போல் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன், ஸ்லிப்பர் க்ளட்ச்சும் ஸ்டாண்டர்டாக உண்டு. அதே ஸ்ப்ளிட் ஹெட்லைட்ஸ், பல்ப் டைப் இண்டிகேட்டர்கள், ஏபிஎஸ், பாடி பேனல்கள் என எல்லாமே அதே! இந்தச் சமாச்சாரங்களை எல்லாம் லோக்கலைஸ் செய்து விற்பனை செய்து கொண்டிருந்தது கவாஸாகி. இப்போது இன்ஜின் உதிரி பாகங்களையும் அந்தப் பட்டியலில் சேர்ப்பதால், புது நின்ஜாவின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புண்டு என்று நினைத்திருந்தால், இல்லை. அதாவது, இப்போதுள்ள நின்ஜாவின் ஆன்ரோடு விலை 3,34,000 ரூபாய் வரும். இந்தப் புது நின்ஜாவின் எக்ஸ் ஷோரூம் விலையே 3.18 லட்சத்துக்கு லான்ச் செய்துவிட்டது கவாஸாகி.ேடிஎம் RC200

உத்தேச விலை: ரூ.2,10,000

ரிலீஸ்: மே 2021

இன்ஜின்: 199.5 சிசி, சிங்கிள் சிலிண்டர்

சிறப்புகள்: ஸ்டைல், பெர்ஃபாமன்ஸ்

புனே – சக்கானில் உள்ள பஜாஜின் தொழிற்சாலையில்தான் கேடிஎம் ஆர்சி, டியூக் போன்ற பைக்குகள் தயாராகின்றன. இந்தத் தொழிற்சாலையில்தான் 2021–க்கான கேடிஎம் RC200 பைக்கும் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. டியூக் 200–க்கு அடுத்து இந்த RC200–க்கு பெரிய எதிர்பார்ப்பு. இந்தத் தொழிற்சாலையிலேயே இந்த பைக்கின் ஸ்பை ஷாட் `Rush Lane' எனும் ஆட்டோமொபைல் வலைதளம் மூலம் கிடைத்திருக்கிறது. படத்தைப் பார்க்கும்போது, கேடிஎம்–க்கே உரித்தான அந்த ஷார்ப் டிசைன் காலி. பென்டகன் வடிவ ஹெட்லைட்டைச் சுற்றி LED ஹெட்லைட் மிளிர்கிறது. ஹெட்லைட், சாதாரண அதே ஹாலோஜன்தான். LED கொடுத்திருக்கலாம். ஆனால், கிராஃபிக்ஸ் புதுசாக இருக்கிறது. முன்பைவிட வைஸர் பெரிதாகி இருக்கிறது. முன் பக்க டிஸ்க் பிரேக், கொஞ்சம் பழசைவிட வித்தியாசமாக இருக்கிறது. வீல் ஹப்புக்குப் பதிலாக, அலாய் ஸ்போக்குகளில் டிஸ்க்கை ஃபிட் செய்திருக்கிறார்கள். வழக்கம்போல், அந்த TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இருக்கும். இன்ஜினைப் பொருத்தவரையும் அதே 199.5 சிசி, சிங்கிள் சிலிண்டர்தான். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ். இதன் பவர் 25bhp@10,000rpm. டார்க் 1.92kgm@8,000rpm. விற்பனையில் இருக்கும் RC200–யைவிட 10,000 ரூபாய் விலை அதிகமாக இதை பொசிஷன் செய்திருக்கிறது கேடிஎம். RC125, RC250, RC390–யையும் அப்படியே கொண்டு வரலாமே கேடிஎம்?பஜாஜ் பல்ஸர் 250

உத்தேச விலை: ரூ.1,45,000

ரிலீஸ்: மே 2021

இன்ஜின்: 250 சிசி, சிங்கிள் சிலிண்டர்

பஜாஜுக்கு 250 சிசியில் மட்டும்தான் பல்ஸர் இல்லை. இப்போது அந்தக் குறையும் தீர்ந்துவிட்டது. முதலில் NS வேரியன்ட்டின் பெயரில்தான் 250சிசி–யை லான்ச் செய்யும் என்று நினைத்திருந்தார்கள். அப்படி NS250 சீரிஸில் வந்தால், இதுதான் பல்ஸர் NS–ன் முதல் மோனோஷாக் அப்ஸார்பர் கொண்ட பைக். இன்ஜினில் பெரிய மாற்றத்தைச் செய்திருக்கிறது பஜாஜ். டொமினாரில் இருக்கும் 250 சிசி இன்ஜினைப் பொருத்துவார்களா... அல்லது புது ஜெனரேஷன் இன்ஜின் வருமா என்று தெரியவில்லை. ஆனால், பவரும் டார்க்கும் டொமினாருக்கும் பல்ஸர் 220F-க்கும் இடையில் இருக்கலாம். அதாவது, 20 – 22bhp பவர் வரலாம். இது நிச்சயம் லிக்விட் கூல்டு இன்ஜின் இல்லை; ஏர்கூல்டு மற்றும் ஆயில் கூல்டு இன்ஜினாகத்தான் இருக்கும். மோனோஷாக் அப்ஸார்பர் என்பதால், முதுகுவலி பார்ட்டிகளுக்கு ஏற்றபடி இதன் ஃப்ரேமையும் ஸ்விங்ஆர்மையும் ட்யூன் செய்திருக்கும் பஜாஜ். ஆனால், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மட்டும்தான் உண்டு. டூயல் சேனல் ஏபிஎஸ் கிடையாது. மற்றபடி எல்இடி ஹெட்லைட், ஃபுல் டிஜிட்டல் மீட்டர் என்று சில வசதிகள் உண்டு. வீல் டிசைன் போன்றவற்றைப் பார்க்கும்போது, அப்படியே NS/RSதான் நினைவுக்கு வருகிறது. பஜாஜ் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு பல்ஸர்.Suzuki Burgman Electric

சுஸூகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

உத்தேச விலை: ரூ.1,25,000

ரிலீஸ்: செப்டம்பர் 2021

பேட்டரி: NA

லாக்டெளனுக்கு முன்பிருந்தே சுஸூகியின் இந்த மேக்ஸி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெஸ்ட்டில் இருந்ததாகச் சொன்னார்கள். இன்னும் டெஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது பர்க்மேன் எலெக்ட்ரிக். பர்க்மேனின் ஸ்பை ஷாட்டும் சிக்கியபாடில்லை. இதன் பேட்டரி விவரங்கள், ரேஞ்ச், எலெக்ட்ரிக், டார்க், பவர் போன்ற எந்தச் சமாச்சாரங்களும் இன்னும் வெளிவராத நிலையில், இந்த செப்டம்பர் மாதத்துக்குள் சுஸூகியிடம் இருந்து ஒரு நல்ல சேதி வரலாம் என்கிறார்கள். அநேகமாக இந்த பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 1.10 லட்சத்துக்குள் சுஸூகி பொசிஷன் செய்யும்பட்சத்தில்... ஏத்தர் 450X, டிவிஎஸ் icube, ஹீரோ இ–மேஸ்ட்ரோ போன்றவற்றுக்குப் பலத்த போட்டியாக இருக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H