கறிவேப்பிலையில் போதுமான அளவு இரும்புச் சத்தினையும் போலிக் அமிலத்தினையும் கொண்டுள்ளது. எலும்புகளை வலுவடையச் செய்வதில் போலிக் அமிலம் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது.கறிவேப்பிலையை மலச்சிக்கல் பிரச்சினையைச் சமாளிக்கக்கூடிய ஒரு மலமிளக்கியாகப் பயன்படுத்தலாம்.கறிவேப்பிலைச் சாறுடன் தேன் கலந்து உட்கொள்வது கூட வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய்க்கான மற்று மருந்தாக பயன்படுகிறது.
கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்பட்ட சாறு அல்லது கறிவேப்பிலையைப் பொடி செய்து உண்பதனால் வயிற்றுப் போக்கு குணமாகும்.மேலும் கறிவேப்பிலையை மலச்சிக்கல் பிரச்சினையைச் சமாளிக்கக்கூடிய ஒரு மலமிளக்கியாகப் பயன்படுத்தலாம்.கறிவேப்பிலைச் சாறுடன் தேன் கலந்து உட்கொள்வது கூட வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய்க்கான மற்று மருந்தாக இருக்க முடியும்.கறிவேப்பிலைச் சாறு பருகுவதினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் களைப்பு மற்றும் மயக்கத்தைக் குறைக்கப் பயன்படுகிறாது.கறிவேப்பிலையின் இலை, வேர், பட்டை, தண்டு மற்றும் பூக்களைத் தண்ணீரில் கொதிக்க வைத்துப் பருகினால் வயிற்றில் இருக்கும் அனைத்து விதமான தொந்தரவுகளிலிருந்தும் விடுபட முடியும்.கறிவேப்பிலையை வழக்கமாகச் சாப்பிட்டு வந்தால் வேதிச்சிக்கிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகளை எளிதில் குறைத்துக் கொள்ளலாம்.கறிவேப்பிலை உட்கொள்வதனால் புற்று நோய் சிகிச்சையின் பாதகமான விளைவுகளிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.கறிவேப்பிலையில் வைட்டமின் ஈ உள்ளதால் அது நோய்த் தொற்றினைக் தடுக்கிறது.