கடந்த
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம்
பத்தாம் தேதிக்கு பின்னர் பணியில் சேரும்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு
அல்லது முன் ஊதிய உயர்வு
கிடையாது என அரசு பணியாளர்
துறை அரசாணை (அரசாணை எண்.37
நாள்: 10.03.2020) மூலம் அறிவித்தது. உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு பெற கடைசி வாய்ப்பு 31.03.2021 - அரசாணை எண்: 116 & 37 தெளிவுரைகள்-
PG TRB CHEMISTRY MATERIALS UNI 1-4 | FREE DOWNLOAD: COMPLETE STUDY MATERIALS:
அதேசமயம்
10-3-2020 க்கு முன் உயர்கல்வி தேர்ச்சி
அல்லது துறைத்தேர்வுகள் தேர்ச்சி பெற்று நிர்வாக காரணங்கள்
அல்லது தனிநபரின் தாமதமான கோரிக்கையினால் ஊக்க
ஊதிய உயர்வு பெறாதவர்கள்
இம்மாதம் 31ஆம் தேதிக்குள் நிதித்
துறை ஒப்புதல் பெற்று ஊக்க ஊதிய
உயர்வு பெற்று கொள்ளலாம் ( அரசாணை
எண்:116 நாள்:15-10-2020) என அரசு அறிவித்திருந்தது.
இதன்காரணமாக கல்வித் துறையில் கடந்த
நவம்பர் மாதம் சுற்றறிக்கை
அனுப்பி 10-3-2020 க்கு முன் உயர்
கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு
பெற தகுதியுள்ளவர்கள் பட்டியல்
மற்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத்
தொகை ஆகியவற்றை முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம்
பெறப்பட்டு நிதித்துறை ஒப்புதல் பெற அரசுக்கு அனுப்பப்பட்டு
உள்ளது.
ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கு
இம்மாதம் 31ஆம்
தேதியே கடைசி நாளாகும் என
அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாலும்
இதுவரைநிதித்துறைஒப்புதல்பட்டியல்கிடைக்கப்பெறாததாலும்எப்போதுநிதித்துறைஒப்புதல்கிடைக்கும்எனஊக்கஊதியஉயர்வுபெறதகுதியுள்ளஆசிரியர்களும்,
அரசுஊழியர்களும் எதிர்பார்த்துகாத்துக்கொண்டுள்ளனர்.