NMMS தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு – மார்ச் 12 கடைசி நாள்!!
தமிழகத்தில் உள்ள 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வு விடைக்குறிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடை குறிப்புகளில் ஆட்சேபனைகள் இருந்தால் அதனை மாணவர்கள் மார்ச் மாதம் 12 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NMMS தேர்வு விடைக்குறிப்புகள்:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்க ஒவ்வொரு ஆண்டும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய வருவாய் மற்றும் தகுதி படிப்புதவித் தொகை தேர்வு நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி நடத்தப்பட்டன.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் பல ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தேர்வை அங்கீகரிக்கப்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம்.
இந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை தற்போது தேர்வுத்துறை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக தேர்வு எழுதிய மாணவர்கள் விடைகளை சரிபார்த்து கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த தேர்வுக்கு வெளியிடப்பட்ட விடைத்தாள்களில் எதாவது மாற்றம் இருந்தால் தேர்வு எழுதிய மாணவர்களும், பெற்றோர்களும் மார்ச் மாதம் 12 ஆம் தேதிக்குள் ntsexam2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் அனுப்ப வேண்டும்.