விழிப்புணர்வு பதிவு கண்டிப்பாக முழுமையாக படிக்கவும் ஒருசிறியகதை (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம்) - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

 


YoutubeWhatsapp GroupFacebookTelegram
Click HereClick HereClick HereClick Here


 

Saturday, 15 May 2021

விழிப்புணர்வு பதிவு கண்டிப்பாக முழுமையாக படிக்கவும் ஒருசிறியகதை (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம்)

🔹ஒரு நாட்டில் ஒரு அரசன் இருந்தாராம். அவன் அறிவிலும் வீரத்திலும் மிக சிறந்து விளங்கி ஆட்சி செய்தார்.

🔹ஆட்சி சிறப்பாக சென்று கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவருக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது.

🔹அவரது அமைச்சர்கள் உதவியுடன் அந்த பிரச்சனையை தீர்க்க முயன்றார் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

🔹நாட்டிலுள்ள அறிவார்ந்த பல அறிஞர்கள் மூலம் முயற்சித்தார். பலன் இல்லை.

🔹தண்டோரா மூலம் ஊர்மக்களுக்கு அறிவிக்க சொன்னார். " ராஜாவின்  பிரச்சனையை தீர்ப்பவருக்கு கேட்கும் சன்மானம் தரப்படும் " என அறிவிக்கப்பட்டது.

🔹நாட்டிலிருந்து ஒரு விவசாயி வந்தார் . ராஜாவின் பிரச்சனையை கேட்டார். நன்கு யோசித்து அதற்கு சரியான தீர்வையும் வழங்கினார்.

🔹ராஜாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி ஆர்ப்பரித்தபடி விவசாயியை பார்த்து உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேளுங்கள் தரப்படும் என்றார்.

🔹அரசே முதலில் ஒரு பெரிய சதுரங்க பலகை வேண்டும் என்றார். அரசனுக்கு எதற்கு என புரியாமல் சரி எனக் கூறி தன்னுடைய மாளிகையில் இருந்த மைதான அளவிற்கு சதுரங்க பலகையை செய்தார்.

🔹இப்போது கூறுங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என கூறினார்.

🔹" அரசே எனக்கு சதுரங்க பலகையின் முதல் கட்டத்தில் ஒரு தங்க காசு வையுங்கள்" என்றார்.

🔹மன்னர் அவ்வளவுதானே என் ஒரு தங்க காசினை வையுங்கள் என்றார். காசு வைக்கப்பட்டது.

🔹"மன்னா தற்போது அடுத்து வரும் கட்டங்களில் அந்த காசுகளின் இரட்டிப்பு அளவிற்கு காசு வையுங்கள் " என்றார்.

🔹கூடி இருந்த மக்களும், அரசவை பணியாளர்களும் கிண்டல் செய்து சிரித்தனர். எவ்வளவு அதிஷ்டமான வாய்ப்பு இவனுக்கு பயன்படுத்த தெரியவில்லையே... இப்படி வாய்ப்பை வீணடிக்கிறானே இவன் என்று...

🔹மன்னனும் அதில் மறைந்துள்ள கணிதம் புரியாமல் அப்படியே ஆகட்டும் என கூறினார்.

🔹காசுகளின் எண்ணிக்கை 1, 2, 4, 8, 16, 32, 64, 128... என கூடி கொண்டே போனது.

🔹முதல் வரிசை முடிவு 128 காசுகளை எட்டியது.

🔹இரண்டாவது வரிசை முடிவு 16384 காசுகளை எட்டியது.

🔹மூன்றாவது வரிசையின் முடிவு 2097152 காசுகளை எட்டியது.

🔹அரசவையின் கருவூலம் பெரும்பான்மை தீர்ந்து போனது. நிலமையின் தீவிரத்தை தற்போது உணர முடிந்தது.

🔹நான்காவது வரிசை முடிவு 268435456 ஐ எட்டியது.

🔹ஐந்தாவது வரிசை முடிவு கணக்கிடவே பல நாட்களானது. அதன் மதிப்பு 34359738368 எண்ணிக்கையை எட்டியது.

🔹தன்னுடைய முழு நாட்டையும் வழங்கினாலும் அதன் மதிப்பை எட்ட முடியாது என உணர்ந்தார்.

🔹மன்னனால் 5 வரிசையே கடக்க முடியவில்லை.

🔹 இந்நிலையில்  8வது வரிசை இறுதியில் 64 வது கட்டத்தில் நிரப்ப அதில் வரும் எண்ணிக்கை அளவிற்கு காசுகள் தன் ராஜ்யம் முழுவதையும் விற்றாலும் கிடைக்காது என உணர்ந்தார் அரசர்.

🔹விவசாயியின் மதிநுட்பத்தை உணர்ந்து அவரிடம் சரணாகதி அடைந்தார் மன்னர்.

#இதுதான்கொரோனாபரவல்_முறை..

▪️ஏறத்தாழ பரவுதல் 2.6மடங்கு . 2 என கொண்டால் 8 நாளில் 256 பேருக்கு பரவும்.

▪️எந்த தடுப்பு நடவடிக்கையும்  எடுக்காமல் சுதந்திரமாக பரவுவதாக கொண்டால்...

▪️முதல் 8 நாட்களில் பாதிப்பு சிறிதாகவே தெரியும். பின்னர்..

▪️9ம்  நாள் 512
▪️10ம் நாள் 1024
▪️11ம் நாள் 2048
▪️12ம் நாள் 4096
▪️13ம் நாள் 8192
▪️14ம்  நாள் 16384
என்று ஆரம்பித்து...

▪️20 நாள் 1,048,576
▪️25 நாள் 33,554,432
என்று போய்க்கொண்டே இருக்கும்.

▪️சரி இந்த கணிதத்தில் ஒரு சங்கிலியை உடைப்போம் . என்ன நிகழும்?

▪️8வது நாளில்  512 பேர். இவர்களை தனிமைபடுத்திவிட்டு, முழுவதுமாக நாமும் தனிமைப்பட்டால் என்ன நிகழும்..!?

▪️512 பேரும் தனிமைபடுத்தப்பட,
தொற்று பரவ அடுத்த உடல் கிடைக்கவில்லை. அதனால் பாதியாக பாதிப்பு குறைத்தால்... வைரஸின் வளர்ச்சி எதிர்மறையாக குறையத் துவங்கும் .

256, 128 , 64, 32, 16, 8, 4, 2, 1

▪️என வரிசையை ரிவர்ஸ் செய்ய இயலும்.

▪️இப்போது நாம் செய்ய வேண்டியது இதுதான்.

▪️வைரஸ் பரவ அதற்கு தேவையான உடலை வாய்ப்பாக தராமல் தடுப்பது தான்.

▫️தனிமைப்படுங்கள்
▫️நோயை கண்டறியுங்கள்
▫️மருத்துவம் எடுங்கள்
▫️சங்கிலியை உடைக்க துணை நில்லுங்கள்.

▪️மக்கள் துணை இருந்தால் இதுவும் சாதாரண நோயாக கடந்து போகும்.

▪️மக்கள் விழிப்பின்றி தொடர்ந்தால் உலக அழிவின் தொடக்க புள்ளி இதுவே.

▪️இது புதிதல்ல 1918 - 1920 ல் ஸ்பேனிஸ் ஃப்ளு நோயால் 1.5 கோடி பாதிப்பும்  40 மில்லியன் உயிரிழப்பும் நடந்துள்ளது. அந்த கட்டத்திலும் தனிமைப்படுதலே தீர்வாக சொல்லப்பட்டது. அதை மக்கள் சரியாக பின்பற்றவில்லை. இதனாலே அவ்வளவு பெரிய இழப்பு.

கட்டுப்படுவோம்!
கட்டுப்படுத்துவோம்!

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.