பல்வேறு புதிய அம்சங்களுடன் வருமான வரித்துறையின் இணையதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
https://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்து வந்த நிலையில், நேற்று முதல் www.incometaxgov.in என்ற புதிய இணையதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதற்காக ஜூன் 1 முதல் ஜூன் 6 வரை இணையதளம் முற்றிலும் இயங்கவில்லை. பழைய போர்ட்டலில் இருந்து புதிய போர்ட்டலுக்கு மாற்றும் பணிகள் 6 நாட்கள் நடைபெற்றன.
இந்த புதிய தளம் www.incometax.gov.in வரி செலுத்துவோரின் வசதிக்காக பல்வேறு சிறம்பம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக சந்தேகம் குறித்து கலந்துரையாடும் வசதி இதில் சேர்க்கப்பட்டுள்ளது . மேலும் வருமான வரி படிவம் தாக்கல் செய்வோருக்கு உதவுவதற்காக வரிசெலுத்துவோர் உதவி மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது .
வருமான வரி படிவம் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு வரி செலுத்துவோருக்கு உடனடியாக ரிட்டர்ன் தொகை கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது . வரி படிவம் குறித்த தொடர் நடவடிக்கைகள் , வரித்துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் , பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஒரே பக்கத்தில் இருக்கும் .