தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்று முதலமைச்சரிடம் கலந்தாலோசித்த பின் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் கட்டமைப்பு வசதிகள்
குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் மேலும் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்
பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது செய்தியாளர்களிடம்
பேசிய அவர் தனியார் பள்ளிகளில் 75% கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க
வேண்டும் என அறிவுறுத்தினார்.