தெலுங்கானா மாநிலத்தில் பொதுமுடக்கத்தை முழுமையாக தளர்த்தியுள்ள நிலையில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா
மாநிலத்தில் நாளையுடன் பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில் தலைவர்கள்
குறித்து ஆலோசிக்க மாநில அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது .இந்த ஆலோசனை
கூட்டத்தில் தொற்றின் பரவல் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்த
நிலையில் நாளை காலை 6 மணி முதல் பொது முடக்க கட்டுப்
பாடுகளை முழுவதுமாக
தளர்த்திக் கொள்ள அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
இதனைத்
தொடர்ந்து ஜூலை 1-ஆம் தேதி முதல் அனைத்து வகையான கல்வி நிறுவனங்களிலும்
அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என
தெலுங்கானா மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.