
ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதல் வழங்கிய
பிறகு, 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்
என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது
தொடர்பான வழக்கில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள்
துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயம் பதில் மனு தாக்கல் செய்தார். அதில்,
முன்னுரிமை அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நிலை
பள்ளிகளில் படிக்கும் 18 வயதிற்கு குறைவான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
செலுத்துவது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இதுவரை எந்த
வழிகாட்டுதல்களையும் வழங்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.