தற்போது அதற்கான நேர்காணல் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணி நியமனம் தொடர்பான ஆணையை 11 நபர்களுக்கு வழங்கினார். இதில் தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை, இளங்கலை வியாபார நிர்வாக துறை, கணித்துறை, வணிகவியல் துறை, கணினி அறிவியல் துறை, கணிப்பொறி பயன்பாட்டுத்துறை, மூலவர் மற்றும் உடற்கல்வித்துறை உள்ளிட்ட 11 நபர்களுக்கு துறை சார்ந்த பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறநிலையத்துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அதற்கான ஆயுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி தொடர்பாக இந்த ஆண்டே அறிவிக்கப்பட்டு, இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெற்று தற்போது பேராசிரியர் நியமனங்களும் நடைபெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.