பிளஸ் 1 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், உற்சாகமூட்டும் தேர்வு நடத்தப்படும் என்று, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
அவர்களுக்கு இதுவரை எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. அதனால் அவர்களுக்கு, பொதுத்தேர்வு ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இந்நிலையில், பிளஸ் 1 மாணவர்களை தயார்படுத்தும் வகையில், உற்சாகமூட்டும் தேர்வு நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பல மாவட்டங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து தேர்வு நடத்தப்படும்.
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்றரை மணி நேரம் தேர்வு நடக்கும். இந்த தேர்வானது பயம் ஏற்படுத்தும் வகையில் இல்லாமல், மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலான, உற்சாகமூட்டும் வகையிலான தேர்வாக நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.