இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் பற்றிய ஒரு கட்டுரை..
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் 1929" ம் ஆண்டு பிறந்தார் லதா மங்கேஷ்கர்..
இவருடைய தந்தை பெயர் தீனநாத் மங்கேஷ்கர்..
இவர் நாடக நடிகர் மற்றும் பாடகர் ஆவார்..
தீனநாத் மங்கேஷ்கருக்கு..
லதா,
ஆஷா,
உஷா,
மீனா
என மொத்தம் நான்கு பெண் குழந்தைகளும்,
ஹிருதயநாத் மங்கேஷ்கர் என்ற ஒரு மகனும் பிறந்தனர்..
(தேனிசைக்குயில் ஆஷா போஸ்லேவும் இந்தியாவின் மிகச்சிறந்த பாடகிகளில் ஒருவர் ஆவார்)
லதாவுக்கு 5 வயது இருக்கும்போதே அவர் தந்தை இசை கற்று கொடுத்தார்..
பின்னர்,
புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் அம்மான் அலிகான் சாஹிப் மற்றும் அமநாத்கான் ஆகியோரிடமும் இசைப்பயிற்சி பெற்றார் லதா மங்கேஷ்கர்..
இவருடைய தந்தையின் சொற்ப வருமானத்திலேயே குடும்பத்தை நகர்த்த வேண்டி இருந்ததால்,
தந்தைக்கு உதவ பாடகியாக வேண்டும் என்று முடிவெடுத்தார் லதா..
அவர் இசைப்பயணத்தை தொடங்கி வைக்கும் முதல் பாடலாக 1942" ம் ஆண்டு கிர்தி அசல் என்ற மராத்திப்பாடலை பாடினார்..
இனி தொடர்ந்து பாட வாய்ப்புகள் கிடைக்கும், தங்களை கஷ்டப்பட்டு வளர்த்த தந்தையை வீட்டில் உட்கார வைத்து அழகு பார்க்கலாம் என நினைத்த லதாவுக்கு ஒரு மாபெரும் துயர சம்பவம் நேர்ந்தது..
அவர் முதல் பாடல் பாடிய அதே ஆண்டில்..
அவரது தந்தை இறந்துவிட்டார்..
அப்போது லதாவுக்கு வயது 13
குடும்பத்தின் மொத்த பாரத்தையும் சுமக்கும் பொறுப்பு மூத்த மகளான லதாவுக்கு ஏற்பட்டது..
தந்தையின் மறைவால் குடும்பமே உறைந்து போனாலும்..
லதா மட்டும் தைரியமாக இருந்தார்..
தன்னால் தன் குரலால் தன் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என நம்பினார்..
இவருடைய தந்தையின் நெருங்கிய நண்பரும்,
நவியுக் சித்திரபட் பிலிம் கம்பெனியின் உரிமையாளருமான விநாயக் தாமோதர் என்பவர் லதாவின் குடும்பத்திற்கு உதவிகள் செய்ததோடு மட்டுமல்லாமல், லதாவை பாடகியாக ஆக்கியதில் பெரும்பங்காற்றினார்..
இசை அமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர்,
மஜ்பூர் என்ற திரைப்பட்டத்தில் பாட லதாவுக்கு வாய்ப்பு கொடுத்தார்..
அந்த பாடல் மெஹா ஹிட் ஆனது..
அடுத்தடுத்து மஹால், அந்தாஸ், ஹர்ஷாத், துளாரி போன்ற படங்களில் பாடினார்..
அந்த பாடல்களும் மெகா ஹிட் ஆகவே லதா மங்கேஷ்கர்
பிரபல பாடகியாக அவதாரம் எடுக்க தொடங்கினார்..
1942" யில் பாட ஆரம்பித்த லதா மங்கேஷ்கர் இன்றுவரை 20 மொழிகளில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களில் பாடி உள்ளார்..
தமிழில் 1954" ம் ஆண்டில் கதவு எண் 44 என்ற படத்தில் முதன்முதலாக பாடினார்..
இசைஞானி இளையராஜாவின் இசையில் கமல் நடித்த சத்யா திரைப்படத்தில் வரும் வளையோசை என்ற பாடல் மெகா ஹிட்..
ஹிந்தியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் பாடியிருக்கிறார்..
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடியிருக்கிறார்..
சினிமா மட்டுமல்லாமல் நிறைய ஆல்பங்களையும் வெளியிட்டிருக்கிறார்.
அவற்றில்..
லதா மங்கேஷ்கர் பாடிய பக்தி பாடல்கள் தான் வட இந்தியர்களின் பூஜை பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
லதா மங்கேஷ்கரின்
வந்தேமாதரம் பாடல் தேசிய கீதத்திற்கு அடுத்தபடியாக மதிக்கப்படுகிறது..
லதா மங்கேஷ்கர் பாடகியாக மட்டுமல்லாமல் இசை அமைப்பாளராகவும், சினிமா தயாரிப்பாளராகவும் உயர்ந்தார்..
இசைத்துறையில் ஒரு பாடகியாக என்ன என்ன சாதிக்க முடியுமோ அத்தனை சாதனைகளையும் சாதித்து முடித்து விட்டார் லதா மங்கேஷ்கர்..
நூற்றுக்கணக்கான விருதுகள் அவரை தேடி வந்தன,
அவற்றில் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது 2001 ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது..
அதேபோல திரை உலகின் உயரிய விருதான தாதாசாகெப் பால்கே விருதும் அவருக்கு வழங்கப்பட்டது..
இதுபோக
3 தேசிய விருதுகள்,
பத்மபூசன், பத்மவிபூசன், பிலிம்பேர் விருதுகள் என நூற்றுக்கணக்கான விருதுகளை வாங்கி குவித்து வைத்துள்ளார்..
ஆறு பல்கலைக்கழகங்களின் விருதுகள் மற்றும் டாக்டர் பட்டங்களை பெற்றிருக்கிறார்..
1999" ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆக்கப்பட்டார்..
எல்லையில்லா புகழ், பட்டம், பதவி, விருதுகள், வளமான வாழ்வு எல்லாம் பெற்ற லதா மங்கேஷ்கர்...
தனது தந்தை ஸ்தானத்தில் இருந்து குடும்பத்தை காப்பாற்ற திருமணமே செய்து கொள்ளவில்லை..
அவர் உடன்பிறந்த சகோதரிகள் அனைவரையும் பாடகிகள் ஆக்கினார்..
தனது தம்பியை இசை அமைப்பாளர் ஆக்கினார்..
தனது குடும்பத்திற்காக ஓய்வில்லாமல் உழைத்த இசைக்குயில் இன்று மூச்சுவிட மறந்தது.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் பற்றிய ஒரு கட்டுரை..
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |