அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம்.
ஒன்றியத்திற்குள்
மற்றும் மாவட்டத்திற்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) மாறுதல்கோரி
விண்ணப்பித்துள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் இன்று மாலை 4.30
மணியளவில் வட்டார கல்வி அலுவலகத்திற்கு வருகை புரிந்து, மாறுதலுக்கான
முன்னுரிமை பட்டியலில் உள்ள அவர்களின் விவரங்களைச் சரிபார்த்து கையொப்பமிட
அறிவுரை வழங்கி அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள்
கேட்டுக் கொள்ளப்பெறுகின்றார்கள்.
மேலும், நாளை
18/06/22 முற்பகல் சரியாக 8.00 மணிக்குள் கள்ளக்குறிச்சி அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளிக்கு ( மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்) தவறாமல்
வருகை புரிந்து கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறும் அறிவுரை வழங்கிடுமாறு
கேட்டுக் கொள்ளப்பெறுகின்றார்கள்.
குறிப்பு:
மேற்கண்ட செய்தி எனக்குத் தெரியவில்லை என்று எந்த ஆசிரியரும் புகார்
அளிக்கா வண்ணம் உடனடியாக அவர்களுக்குத் தகவல் தெரிக்குமாறு சம்பந்தப்பட்ட
பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்
கொள்ளப்பெறுகின்றார்கள்.
வ.க.அலுவலர்கள்,
சங்கராபுரம்.