பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கான முடிவு இன்று வெளியாகிறது.
அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு தேர்வு துறை நடத்தும், பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு, கடந்த மாதம் துணை தேர்வு நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று பிற்பகல் 3:00 மணிக்கு வெளியிடப்படும்.தேர்வர்கள், தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தேர்வுக்கான மறுகூட்டலுக்கு, வரும் 25, 26ம் தேதிகளில், மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில், உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். மறுகூட்டலுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும் தலா, 205 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டல் முடிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.