சனிபெயர்ச்சி விரைவில் நிகழப்போகிறது. இந்த கிரகப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகிறது.
சனிபகவான் நீதிமான். அவர் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். 12 ராசிகளையும் கடக்க சனி பகவான் 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். இதில் ஏழரை ஆண்டுகாலம் பிடித்து ஆட்டி வைப்பார். சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். நிகழவிருக்கும் சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிகாரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
சனிபகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. கும்ப ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷம் ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியையும், 10ஆம் பார்வையாக விருச்சிகம் ராசியையும் பார்வையிடுகிறார்.
சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசியான தனது சொந்த வீட்டிற்குச் செல்கிறார். சனிபகவான் சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தையும் சில ராசிக்காரர்களுக்கு படிப்பினைகளை கொடுத்து அதற்குப் பிறகு நல்ல பலன்களைக் கொடுப்பார் எனவே ஜாதகத்தில் தசாபுத்தி சரியாக இருப்பவர்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்.
மேஷம் பணமழை பொழியும்

மேஷ ராசிக்காரர்களுக்கு ராசியில் குருவும் 11ஆம் வீட்டில் சனியும் அமரப்போகும் காலம் அற்புதமான பலன்கள் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். வெளிநாடு போகும் யோகம் வரும். பணம் கொட்டப்போகிறது. தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கவுரவம் அந்தஸ்து கிடைக்கும். திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. மழலைச் செல்வத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரும்.
ரிஷப சச யோகம்
சனி பகவான் ரிஷப ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமரப்போவதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். அதிக பணவரவும் லாபமும் கிடைக்கும். பாவ கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தால் முழு பலம் பெறும். அதுவும் கும்ப ராசியில் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். நல்ல வேலைக்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. கடந்த பல வருடங்களாக பட்ட கஷ்டங்களுக்கு பலன்கள் தேடி வரப்போகிறது. இனி வரும் காலம் அற்புதமான காலமாக அமையப்போகிறது. இனி விடிவு காலம், புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தசாபுத்தியும் அற்புதமாக சேர்ந்தால் கோடீஸ்வரயோகம் தேடி வரும் காலம். அனைத்திலும் ஏற்றம் தரும் காலம் வரப்போகிறது.
மிதுனம் பாக்ய சனி
கண்டச்சனி, அஷ்டம சனியால் ஐந்து ஆண்டு காலம் கஷ்டங்கள் அனுபவித்த மிதுன ராசிக்காரர்களுக்கு சிரம காலம் முடியப்போகிறது. பாக்ய சனி வரப்போகிறது. சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். மிகச்சிறந்த தன யோகத்தை தரப்போகிறார். சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும். நிறைய பணவரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள்.
கன்னி ராசி ராஜயோகம்
கன்னி ராசிக்காரர்களே உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி பகவான் அமரப்போகும் காலம் பொன்னான காலம். அத்தனை சிறப்புகளையும் தருவார். ஆறில் சனி முழு அதிகாரத்தையும் சனி தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். சனி தனது சொந்த வீட்டுக்கு வருவதால் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும். கொடுத்த கடன்கள் விரைவில் வீடு தேடி வரப்போகிறது. தொட்டது துலங்கும் காலம் கைகூட வரப்போகிறது.
புது வேலை, பதவி உயர்வு, நினைத்த ஊருக்கு இடமாற்றம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கை கூடி வரும். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். அதியோகம் வரப்போகிறது. சுகங்கள் தேடி வரும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். வீடு கட்டப்போகிறீர்கள் ராஜயோக காலம் வரப்போகிறது.
தனுசு அற்புத காலம்
தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் முடியப்போகிறது. இத்தனை ஆண்டுகாலமாக எத்தனையோ கஷ்டங்கள் பட்டிருப்பீர்கள். ஜனவரி 2023 முதல் நல்ல காலம் பிறக்கப் போகிறது. பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள். திருமண விசயங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் பதவி யோகம் வரும். புதிய தொழில் அமையும். இனி ராஜ யோக காலம் என்பதால் அனுபவிக்கத் தயாராகுங்கள்.