உடனடி வேலைவாய்ப்பை அள்ளித்தரும் நர்சிங் படிப்புகள்! இப்போது விண்ணப்பிக்கலாம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


உடனடி வேலைவாய்ப்பை அள்ளித்தரும் நர்சிங் படிப்புகள்! இப்போது விண்ணப்பிக்கலாம்:


 உடனடி வேலைவாய்ப்பை அள்ளித்தரும் நர்சிங் படிப்புகள்!

இப்போது விண்ணப்பிக்கலாம்….

பொது மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம் என்றில்லாமல், துணை மருத்துவப் படிப்புகளுக்கும் சந்தையில் எப்போதும் தேவை இருந்து வருகிறது. பொதுவாகவே, படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள் வேலையும், அதன்மூலம் பொருளீட்டுவதையும் எதிர்பார்ப்பது இயல்புதான். எனினும், சில பணிகள் வெறுமனே வேலை என்பதை தாண்டியும் மன நிறைவைக் கொடுக்கக்கூடியதாகவும் இருக்கும். அதில், நர்சிங் (செவிலியர்) பணிக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. 

செவிலியர்கள் வேலை செய்கிறார்கள் என்பதைக் காட்டிலும் அவர்கள் சேவை செய்கின்றனர் என்று சொல்வதுதான் சாலப் பொருந்தும். ஒரு நன்கு பயிற்சி பெற்ற செவிலியர் என்பவர் கிட்டத்தட்ட பாதி மருத்துவருக்கு சமம். வாழ்கின்ற நைட்டிங்கேல் மட்டுமின்றி, வாழ்கின்ற தெரசாக்களும் கூட செவிலியர்கள்தான் என்றால் மிகையாகாது. 
 
கிழக்கிந்திய கம்பெனிகளின் வருகைக்கு பிறகே இந்தியாவில் பயிற்சி பெற்ற செவிலியர்கள் உருவாகத் தொடங்கினர். அதனால், இத்துறையில் கிறித்தவ பெண்களின் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லலாம். இன்றைய நிலையில், ஆண்களும் செவிலியர் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டினாலும்கூட, இத்துறையில் ஆதிக்கம் செலுத்துவது என்னவோ பெண்கள்தான். அவர்களுக்கு ஏற்ற துறைகளுள் நர்சிங் படிப்பும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

நர்சிங் பயிற்சிப் பள்ளிகள், கல்லூரிகளை கண்காணிப்பதில் இருந்து, தரமான செவிலியர்களை உருவாக்குவது வரை இந்திய நர்சிங் கவுன்சில் (Indian Nursing Council - INC) முக்கியப் பங்கு வகிக்கிறது. ஐஎன்சி, நோயாளி - செவிலியர் விகிதாச்சார கணக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, மூன்று நோயாளிகளைக் கவனித்துக்கொள்ள ஒரு செவிலியர் தேவை என்கிறது. இன்றைய நிலையில், இந்தியாவில் மட்டுமே உடனடியாக 4 லட்சம் செவிலியர்களுக்கு பணித் தேவை இருக்கிறது, என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள்.
 
இந்தியாவில் ஆண்டுக்கு 22 ஆயிரம் செவிலியர்கள் அரசு மற்றும் அதைச் சார்ந்த மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். கார்ப்பரேட் மருத்துவமனைகளின் அசுர வளர்ச்சியால் செவிலியர்களுக்கு இன்னும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. மருத்துவ சுற்றுலா மேற்கொள்ளும் நிறுவனங்கள், ஹோம் நர்சிங், இண்டஸ்ட்ரியல் நர்சிங் என செவிலியர்களுக்கு வேலைவாய்ப்புக்கான எல்லைகளும் விரிவடைந்திருக்கின்றன. தவிர, வளைகுடா நாடுகள், இந்திய நர்சுகளுக்கு கைநிறைய சம்பளத்தை கொடுத்து பணிக்கு அமர்த்தி கொள்கின்றன. கேரளாவில் உருவாகும் நர்சுகளில் கணிசமானோர், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு சென்று விடுவது இப்போதும் தொடர்கிறது. 
 
இப்படி எல்லா காலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த செவிலியர் படிப்பில் சேர்வது எப்படி, அதற்கான பயிற்சி மையங்கள், படிப்பின் கால அளவு உள்ளிட்ட தகவல்களை இனி பார்க்கலாம். 

படிப்பின் விவரம்: 

B.Sc., Nursing - 4 Years 

B.Sc., (Honors) Nursing - 4 Years 

Bsc (Post Basic) Nursing - 4 Years 

Diploma in Nursing and Midwifery - 3 Years 

Diploma in Ayurvedha Nursing and Pharmacy - 2 1/2 Years 

(Diploma in Nursing - படிப்பு இந்த கல்வியாண்டிலிருந்து நிறுத்தம்)

 
கல்வித்தகுதி: 

12ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளை படித்திருக்க வேண்டும்.

2021 ஆம் ஆண்டு முதல் பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி லைஃப் சையின்ஸ் படிப்புகளுக்கும் இனி நீட்தேர்வு முடிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படலாம் என்றும் தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.

 
மத்திய அரசு செவிலியர் கல்லூரிகளில் சேரும் நடைமுறை: 

1. எய்ம்ஸ் நடத்தும் அகில இந்திய நுழைவுத்தேர்வு. இதன் விவரங்களை www.aiimsexams.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

மத்திய அரசின் செவிலியர் கல்லூரிகள் புது டெல்லி, போபால், புவனேஷ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்பூர், ரிசிகேஷ் ஆகிய இடங்களில் உள்ளன. (AIIMS–All India Entrance Test – www.aiimsexams.org.
(New Delhi, Bhopal, Bhubaneswar, Jodhpur, Patna,
Raipur, Rishikesh).

2. ஜிப்மர் நுழைவுத்தேர்வு - கூடுதல் விவரங்களுக்கு www.jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

3. நேஷனல் இன்ஸ்டிடியூப் ஆப் ஆயுர்வேதா, ஜெய்பூர் நடத்தும் அகில இந்திய நுழைவுத்தேர்வு. இதுகுறித்த விவரங்களுக்கு: www.nia.nic.in (National Institute of Ayurvedha, Jaipur- All India
Entrance Exam – www.nia.nic.in)

4. Armed Forces Medical College, Pre-medical Test – Pune www.afmc.nic.in

5. 5. Health Education and Research Council of India – www.herci.in
 

தமிழக அரசின் செவிலியர் கல்லூரிகளில் சேருவதற்கான நடைமுறை: 

மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்படும் மாநில அளவிலான கலந்தாய்வு மூலமாக பிளஸ்-2வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் செவிலியர் படிப்புக்கு சேர்க்கை நடத்தப்படும்.
 
இணையதள முகவரி: www.tnhealth.org
 
செவிலியர் கல்லூரிகள் எண்ணிக்கை: 

1. அரசு செவிலியர் கல்லூரிகள் - 15 (சென்னை, மதுரை, செங்கல்பட்டு, சேலம், தேனி ஆகிய மாவட்டங்களில் அரசு செவிலியர் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன).

2. தனியார் செவிலியர் கல்லூரிகளின் எண்ணிக்கை - 156

3. சுயநிதி கல்லூரிகளின் எண்ணிக்கை - 6
 
கல்வியின் பயன்பாடு: 

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செவிலியராக பணியாற்றலாம். எம்.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட உயர்கல்வியும் படிக்கலாம். நர்சிங் பயிற்சி முடித்தோருக்கு வெளிநாடுகளில் எப்போதும் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.
 
ஸ்டாஃப் நர்ஸ், உதவி செவிலியர் கண்காணிப்பாளர், துணை செவிலியர் கண்காணிப்பாளர், வார்டு சிஸ்டர், வார்டு கண்காணிப்பாளர், செவிலியர் பயிற்சி மைய இயக்குநர், நகர்ப்புற சுகாதார செவிலியர் என பல நிலைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. 
 
செவிலியர் படிப்பை முடித்தவுடனேயே உள்ளூரிலேயே முன்னணி தனியார் மருத்துவமனைகளில் 7000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையிலான ஊதியத்தில் பணி வாய்ப்பை பெறலாம். 3 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னணி மருத்துவமனைகளில் 20,000 ஆயிரம் முதல் 30,000 ரூபாய் வரையிலும், கூடுதல் அனுபவம் மிக்கவர்களுக்கு 50,000 ரூபாய் வரையிலும் ஊதியம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

துணை மருத்துவ படிப்புகளுக்கு ஆக.1 முதல் விண்ணப்பம்!

2022-2023ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ துணைப்படிப்புகளுக்கு ஆக.1 முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 

மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

2022-2023ம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த படிப்புகள், 

பி.பார்ம்(லேட்டர்ஸ் என்டிரி) படிப்பு, 
போஸ்ட் பேசிக் பிஎஸ்சி நர்சிங் படிப்பு, 
போஸ்ட் பேஸிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நர்சிங் படிப்பு, 
பெண்களுக்கான செவிலியர் பட்டயப்படிப்பு, 
மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகிய படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக இன்று ஆக. 1, காலை 10 மணி முதல் இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கும். 

வரும் 12ம் தேதி பிற்பகல் 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். 

தகவல் தொகுப்பு மற்றும் விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களையும் www.tnhealth.tn.gov.in, www.tnmedicailseletion.org என்ற இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H