இந்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் ஒன்றிணைந்து குரூப் 1 தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு பயிற்சியை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் நியூஸ்18 இணையத்திடம் தெரிவிக்கையில்," மிகக் குறுகிய காலத்தில் குரூப் 1 தேர்வுக்கு தேர்வர்கள் தயாராக வேண்டிய சூழல் இருப்பதால், வாரந்தோறும் மாதிரித் தேர்வுகள் நடத்த முடிவெடுத்துள்ளோம். முழு நேர பயிற்சி வகுப்புகள் இப்போதைக்கு இல்லை. இருப்பினும், தேர்வர்களின் புரிதலை மதிப்பிடுவதற்கும் அளவீடு செய்வதற்கும் இந்த மாதிரித் தேர்வுகள் அவசியம் தேவை" என்று தெரிவித்தார்.
மேலும், அனுபவம் வாய்ந்த நபர்கள் கொண்டு வினாத்தாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு, கலந்துரையாடல் நடத்தப்படும். கொள்குறி வகை வினாக்களை எதிர்கொள்வது தொடர்பாகவும், தேர்வின் தன்மைகள் குறித்தும் பயன்தரக் கூடிய வகையில் விளக்கமளிக்கப்படும் என்று கூறினார்.
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்த பட்டியலிடப்பட்ட வகுப்பினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், ஓபிசி மற்றும் பொது பிரிவினர் என அனைத்து தரப்பு மாணவர்களும் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
மாதிரித் தேர்வுகள் பயிற்சி தொடங்கும் நாள்: 6, ஆகஸ்ட், 2022
வாரந்தோறும் பாடவாரியாக மாதிரித் தேர்வுகள் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு நடைபெறும் ஒருவாரத்திற்கு முன்பு வரை பயிற்சித் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள மாணவர்கள் 90950 06640, வாசுதேவன்-94446 41712, அமலா-63698 74318, ஜனனி-97906 10961 என்ற தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம். மேலும், தேர்வர்கள் தங்களது குரூப் 1 தேர்வுக்கான விண்ணப்ப நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.









