மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் ,
மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு . அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் இன்று (
5.9.2022 ) சென்னை , பாரதி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ,
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்தும் அதைக் கடந்தும்
முழுமையான கல்வியை வழங்கிடும் வகையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 26
தகைசால் பள்ளிகளையும் , அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி ,
நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை
வழங்கும் வகையில் 15 மாதிரிப் பள்ளிகளையும் தொடங்கி வைத்தார்.