விலைவாசி தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
ஜனவரி முதல் ஜூன் வரையிலும், மற்றும் ஜூலை முதல் டிசம்பர் வரையிலும் என 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் மாற்றம் செய்யப்படும்.
அரசு ஊழியர்கள்14 % அகவிலைப்படி உயர்வு... எப்படி முதலீடு செய்து, பணக்காரர் ஆகலாம்?இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் அல்லது பென்சனில் 34 சதவிகிதம் அகவிலைப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஜூலை-டிசம்பர் காலத்துக்கான அகவிலைப்படி மாற்றத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, ஏற்கெனவே 34 சதவிகிதமாக வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 38 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலம் நெருங்கிவரும் நிலையில் இந்த அகவிலைப்படி உயர்வு செய்தி மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
அரசு ஊழியர்கள்இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் 50 லட்சத்துக்கும் மேலான மத்திய அரசு ஊழியர்கள், 60 லட்சத்துக்கும் மேலான ஓய்வூதியதாரர்கள் பலன் அடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.