பணி நீக்கம் செய்யப்பட்ட மற்றும் ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள், தங்கள் விடுப்பு பலன்களை பணமாக்க தகுதியற்றவர்கள் ஆகின்றனர்' என, தமிழக அரசு தெரிவித்துஉள்ளது.
இது தொடர்பாக, அரசு ெவளியிட்ட அரசாணை விபரம்:தமிழக அரசு ஊழியர்களுக்கான
அடிப்படை விதிகளில், ஒரு அரசு ஊழியரை பணியில் இருந்து நீக்குதல் என்பது,
அவரது கடந்த கால சேவையை ரத்து செய்யும் என்ற விதி, புதிதாக
சேர்க்கப்பட்டுள்ளது.ஒருவர் சேவை அல்லது பதவியில் இருந்து ராஜினாமா
செய்தால், கடந்த கால சேவையை இழக்க நேரிடும். சேவை தகுதியுடைய அரசின் கீழ்,
தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ, முறையான அனுமதியுடன், அரசின் கீழ் மற்றொரு
நியமனத்தை மேற்கொள்வதற்காக பதவி விலகல் விண்ணப்பம்
சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், கடந்த கால சேவையை இழக்க நேரிடாது.பணி நீக்கம்
செய்யப்பட்ட அல்லது ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள், தாங்கள் சம்பாதித்த
விடுப்பு மற்றும் தனியார் விவகாரங்களுக்கான விடுப்பை, பணமாக்குவதற்கு
தகுதியற்றவர்கள். பணி ஓய்வு பெறும் வயதை அடைந்தும், பணியில் இருந்து ஓய்வு
பெற அனுமதிக்கப்படாதவர்கள், முறைகேடு அல்லது குற்றவியல் முறைகேடு மீதான
விசாரணை முடியும் வரை, தகுதியான அதிகாரியால் இறுதி உத்தரவு
பிறப்பிக்கப்படும் வரை, ஈட்டிய விடுப்பை பணமாக்க இயலாது. அவர்களின்
இடைநீக்க காலத்தை ஒழுங்குபடுத்திய பிறகு, பணப்பலன் வழங்கப்பட
வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.