முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பார்களாக மாநில துணைத் தலைவர் ராஜரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் பெலிக்ஸ், மாவட்ட செயலாளர் துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 6 வது, 7 வது மத்திய ஊதிய குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.