2014 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜன் தன் யோஜனா திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
மேலும் தேசிய அளவிலான நிதி சேவைகளை பெறுவதற்கும் இந்த திட்டம் வழி
வகுக்கிறது. மேலும் பணம் அனுப்புவதற்கும் வங்கி சேமிப்பு மற்றும்
ஓய்வூதியம் ஆகிய சேவைகளுக்கும் PMJDY என அழைக்கப்படும் பிரதான் மந்திரி ஜன்
தன் யோஜனா திட்டத்தை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
நாடு முழுவதும் மாநிலங்களின் தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய மாவட்டங்களிலும் அதன் தலைநகரங்களிலும் இந்த திட்டம் துவங்கப்பட்டது.
பத்தாயிரம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்:
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்கள் பத்தாயிரம் வரை ஓவர் ட்ராஃப்ட் மூலம் கடன் பெற்றுகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஐந்தாயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என்ற உச்ச வரம்பு தற்போது இரண்டு மடங்காக்கப்பட்டு பத்தாயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் எனவும், 2000 ரூபாய் வரை எந்தவித நிபந்தனைகள் இல்லாமலும் கடன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பணம் பெறுவதற்கு உங்களது ஜன் தன் கணக்கானது துவங்கப்பட்டு குறைந்த பட்சம் ஆறு மாதம் ஆகி இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களால் இரண்டாயிரம் ரூபாய் வரை மட்டுமே ஓவர் ட்ராஃப்ட் பெற முடியும். முன்னர் 60 வயது உடையவர்கள் மட்டுமே கடன் பெற முடியும் என்று இருந்த நிபந்தனை சற்று தளர்த்தபட்டு தற்போது 65 வயது உடையவர்கள் ஜன் தன் கணக்கு வைத்திருந்தால் மேற்கண்ட சேவைகளை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, அடல்ட் பென்ஷன் யோஜனா, மைக்ரோ யூனிட் டெவலப்மென்ட் அண்ட் ரீபைனான்ஸ் ஏஜென்சி வங்கி ஆகிய திட்டங்களை பெறுவதற்கு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்கு வைத்துள்ளவர்கள் தகுதியானவர்கள் ஆவர்.
நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு துவக்க விரும்பினால் உங்களுக்கு ஆதார் அட்டை இருந்தால் மட்டும் போதும். உங்களுக்கு வங்கி கணக்கு துவங்கப்பட்ட பிறகு உங்களுக்கான ஏடிஎம் கார்டு கொடுக்கப்படும். அதை வைத்து நாடு முழுவதும் எந்த ஏடிஎம் மெஷின்களில் இருந்தும் உங்களால் பணம் எடுத்துக் கொள்ள முடியும். இதில் ஒரு லட்சம் ரூபாய் வரை விபத்துக்கான காப்பீடு, முப்பதாயிரம் ரூபாய் வரை ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது. மேலும் ஆயுள் காப்பீட்டுக்கான சந்தா தொகையை இந்திய அரசே செலுத்தும்.
மாநில அரசு துறைகளின் திட்டங்களின் பயன்பெறும் நபர்களுக்கான தொகை அவரவர் வங்கி கணக்குகளுக்கு உடனுக்குடன் அனுப்பப்படும். முக்கியமாக இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூபே கிஷான் என்ற அட்டைகளை வழங்குவதற்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் நடவடிக்கை எடுக்க வகை செய்யப்பட்டுள்ளது.