உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதே இங்கு பலரின் ஆசை, ஆனால் எல்லோருமே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்களா என்றால் இல்லை.
நமது உடலை நமது ஆசைப்படி கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டுமானால் நாம் மூன்று விஷயங்களை முறையாக செய்ய வேண்டும், அதாவது நமது ஆர்வம், உணவு மற்றும் உடற்பயிற்சி. உடல் பருமனை குறைக்க பலரும் பல்வேறு விதமான முயற்சிகளை கையாண்டு வருகின்றனர், அது சிலருக்கு பலனை கொடுக்காமலும் போய்விடுகிறது, ஏனெனில் அவர்கள் முறையாக வழிமுறைகளை பின்பற்றாதது தான் காரணம். எவ்வளவு தீவிரமான உடற்பயிற்சி செய்தாலும் உணவுக்கட்டுப்பாடும் அவசியம், உடல் எடையை குறைக்க நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்களை பற்றி இங்கே காண்போம்.
1) முதல் விஷயம் என்னவென்றால் உடல் எடையை குறைப்பதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம், நீங்கள் நினைத்தபடி உடல் எடையை குறைப்பது கொஞ்சம் சவாலான விஷயம் தான். கொஞ்சம் கொஞ்சம்கா தான் உடல் பருமனை குறைக்க முடியும், நொடிப்பொழுதில் நீங்கள் விரும்பும் மாற்றங்களை கொண்டு வர முடியாது. நீங்கள் விரும்பும்படி உடற்பயிற்சி செய்யவும், உணவு கட்டுப்பாட்டில் இருக்கவும் உங்கள் மூளையும் உங்களுக்கு உதவ வேண்டும். சில சமயங்களில் சிலர் உடற்பயிற்சியையும், உணவு கட்டுப்பாட்டையும் மறந்துவிடுகின்றனர், அதனால் நீங்கள் உடல் எடையை குறைப்பதில் முழு அர்ப்பணிப்போடு ஈடுபட வேண்டும், அதுதான் முக்கியம்.
2) இரண்டாவது உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது, விரும்பிய உடலைப் பெற உணவு மற்றும் பானங்களில் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டும். உங்கள் உடலில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர விரும்பினால் முறையான உணவு நிபுணரின் ஆலோசனையை பெறுவது நல்லது. முறையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்ண வேண்டும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்க வேண்டியது அவசியம். அதேசமயம் உங்கள் உணவு உடற்பயிற்சியின் பலனை கெடுத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள், நீங்கள் முறையான உணவு அட்டவணையை பின்பற்றி சரியான நேரத்தில் உணவு சாப்பிடுவது உடல் எடை இழப்பில் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
3) மூன்றாவது விஷயம் என்னவென்றால் விரும்பிய உடலைப் பெற விரும்புபவர்களில் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும், உடல் எடையை குறைப்பிற்கு ஆர்வம் மற்றும் உணவு இவற்றை தவிர முக்கியமானது உடற்பயிற்சி தான். இணையத்தில் பல்வகையான உடற்பயிற்சிகள் உள்ளது, அதனை பார்த்து நீங்கள் விரும்பும் பயிற்சிகளை தினமும் தவறாமல் செய்யவேண்டும். அதேசமயம் முறையான உடற்பயிற்சியாளரின் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்வது நல்லது, ஏனெனில் நாம் தவறான பயிற்சிகளை செய்தால் அது நமது நரம்பு அல்லது தசைகளில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆரம்பத்திலேயே கடினமான பயிற்சிகளை செய்துவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக செய்து பின்னர் பயிற்சிகளை அதிகமாக்குங்கள்.