மொத்தம் 46 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த நவதாரணி என்ற மாணவி மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை தேர்வு செய்துள்ளார். பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் 102 மதிப்பெண்களை அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி நவதாரணியின் தந்தை ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்த நவதாரணி, தனது மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை இலக்காக வைத்து தற்போது சாதித்தும் காட்டியுள்ளார். இது தொடர்பாக நவதாரணி கூறுகையில், என் உடல் வளர்ச்சி குறித்து கேலி செய்வார்கள். அப்போது வருந்தினாலும் நாளடைவில் அதை மறந்து சாதிக்க நினைத்தேன்' என தெரிவித்தார். சாதிக்க உயரம் தடை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.









