தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் வரும் 20ம் தேதி செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கன மழையும், 21ம் தேதி காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென்கிழக்கு
வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு
பகுதி உருவாகியுள்ளதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 19ம் தேதி வலுப்பெறக்கூடும் எனவும்
கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதற்கடுத்த 3 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழகம் - புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை வரை மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வரும் 20ம் தேதி செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.