தேர்வு இல்லாத அஞ்சல் துறை வேலை : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்.. விண்ணப்பிக்கும் முறை இது தான்..! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 31 January 2023

தேர்வு இல்லாத அஞ்சல் துறை வேலை : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்.. விண்ணப்பிக்கும் முறை இது தான்..!

 

ந்தியா முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், துணை கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் உதவியாளர் பதவியில் உள்ள 40,899 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலிப்பணியிடங்கள் இடம்பெற்றுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் போதுமானது. மேலும் தமிழ் படித்திருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்குச் சம்பளம் ரூ.10,000 முதல் ரூ. 29,380 வரை வழங்கப்படவுள்ளது. மேலும் இப்பணியிடங்களுக்குத் தேர்வு இல்லாமல் 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்படவுள்ளது. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி, என்னென்ன ஆவணங்கள் தேவை மற்றும் உங்கள் பகுதி தபால் அலுவலகத்தில் வேலை பெறுவது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.

10 நிமிடத்தில் அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மொத்தம் மூன்று Stage உள்ளது. விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யத் தேவையான விவரங்கள் கீழ் வருமாறு:-



ஸ்டெப் 1 :https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையத்தள முகவரிக்குச் செல்ல வேண்டும்.

ஸ்டெப் 2 : Stage 1.Registration என்பதை கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3 : அதன் தொடர்ச்சியாக ஒரு பக்கம் ஓபன் ஆகும். அதில் உங்களுடைய கட்டாய விவரங்கள் உள்ளிட வேண்டும். உங்களின் போன் நம்பர் மற்றும் இமெயில் தகவலை பதிவிடவேண்டும். பின்னர் விண்ணப்பதாரின் பெயர் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் இருப்பது போலவே இருக்க வேண்டும்.

அதனைத்தொடர்ந்து, அப்பா பெயர், பிறந்த நாள், பாலினம், சாதி, 10 ஆம் வகுப்பு எந்த வட்டாரத்தில் தேர்ச்சி பெற்றீர்கள், தேர்ச்சி பெற்ற வருடம் போன்றவை இடம்பெற வேண்டும். போன் நம்பர் மற்றும் இமெயிலை சரிபார்க்க validate என்ற ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்து தரவுகளை உறுதி செய்ய வேண்டும். கடைசியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளை அதில் உள்ளது போலவே உள்ளிட்டு Submit செய்யவும்.



ஸ்டெப் 4 : பின்னர் அதனைத் தொடர்ந்து, ஆதார் எண் மற்றும் இதர விவரங்களை உள்ளிடுவதற்கான பக்கம் ஓபன் ஆகும். அதில் ஆதார் எண், மாற்றி திறனாளியாக இருந்தால் அதற்கான குறிப்பு, 10 ஆம் வகுப்பில் படித்த மொழி, ஏற்கனவே வேலையில் உள்ளவரா? அப்படி என்றால், தடையின்மை சான்றிதழ் (NOC) உள்ளதா போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டும். அதைத்தொடர்ந்து புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்ற வேண்டும். புகைப்படத்தில் அளவு 50 KB கீழ் இருக்க வேண்டும், கையொப்பத்தின் அளவு 20 KB கீழ் இருக்க வேண்டும்.

பதிவேற்றத்திற்கு ஏற்ற புகைப்படத்தின் அளவை குறைப்பது எப்படி?

உங்களில் புகைப்படம் மற்றும் காகிதத்தில் கையொப்பம் போட்ட அதனைப் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கூகுளில் https://www.reduceimages.com/ என்ற இணையத்தளத்தில் உங்களின் புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் படத்தை உள்ளிட்டு அதனின் அளவை குறைத்துக் கொண்டு பதிவிடலாம்.



ஸ்டெப் 5 : அதன் பின்னர் நீங்கள் உள்ளிட்ட விவரங்கள் தோன்றும். உங்களின் விவரங்களைச் சரிபார்த்துக் கொண்டு கீழ் உள்ள Box யை கிளிக் செய்து Submit கொடுக்கவும்.

ஸ்டெப் 6 : இந்த 5 ஸ்டெப் மூலம் நீங்கள் வெற்றிகரமாகப் பதிவு செய்து முதல் Stage கடந்துவிடுவீர். அதன் பின்னர் Continue to Apply என்ற இடத்தை கிளிக் செய்து, தொடர்ந்து விண்ணப்பப் பக்கத்திற்குச் செல்லவும்.

ஸ்டெப் 7 : அதில் உங்கள் போன் எண்ணுக்கு ஒடிபி எண் ஒன்று வரும். அதனை விண்ணப்பபடிவத்தில் உள்ளிட்டு அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும்.

ஸ்டெப் 8 : ஆன்லைன் விண்ணப்படிவம் திறக்கும். அதில் உங்களின் பெயர், அப்பா பெயர், பாலினம், பதிவு எண், பிறந்த நாள் மற்றும் சாதி ஏற்கனவே இடம்பெற்று இருக்கும். அதன் கீழ் உங்களில் வீட்டு முகவரி தகவல்களை உள்ளிட வேண்டும். வீட்டு முகவரியைப் பொறுத்தவரைக் கதவு எண், தெரு பெயர், பகுதி, மாவட்டம் மற்றும் அஞ்சல் குறியீடு போன்றவற்றை உள்ளிட வேண்டும். நிரந்தர முகவரிக்கும் அதையே கொண்டு பூர்த்தி செய்யலாம்.

தொடர்ந்து, அதன் கீழ் கல்வித்தகுதி பற்றிய விவரங்களை உள்ளிட வேண்டும். எந்த போர்டில் படித்தீர்கள் என்ற இடத்தில் தமிழ்நாடு State Board of School Examination என்ற option தேர்வு செய்யவும். Result type இல் Marks என்று பதிவிடவும்.

அதனைத் தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களைப் பதிவிடுவதற்கான கட்டங்கள் திறக்கும். அதில் நீங்கள் எடுத்த மதிப்பெண்களைச் சரியாகப் பதிவிடவும். மொழி தேர்வில் தமிழ் மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் save and continue என்ற இடத்தை கிளிக் செய்யவும்.



ஸ்டெப் 9 : எந்த பகுதியில் உங்களுக்கு வேலை வேண்டும் என்று தேர்வு செய்வதற்கான பக்கம் திறக்கும். அதில் Circle தமிழ்நாடு என்றும் Division applying for என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்ற பகுதியை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் உள்ளிட்ட முகவரியில் அடிப்படையில் Divisions உங்களுக்கு காண்பிக்கப்படும். சென்னையை பொருத்தவரை மொத்தம் நான்கு பகுதிகள் உள்ளது.



ஸ்டெப் 10 : நீங்கள் தேர்வு செய்யும் பகுதியை பொருத்து பணியிடம் காலியாக உள்ள தபால் நிலையங்களின் பட்டியல் காட்டும். அதில் நீங்கள் விருப்பப்படும் இடத்தை தேர்வு செய்துகொள்ளலாம். குறைந்தது 5 இடங்கள் தேர்வு செய்யலாம். அதனைத்தொடர்ந்து, கீழே உள்ள Box யை கிளிக் செய்து save and Proceed கொடுக்க வேண்டும்.



தற்போது முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதனை Print கொடுத்து எடுத்து வைத்துகொள்வது நல்லது. பெண்கள், திருநங்கைகள், SC/ST/PwD பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. இதர பிரிவினர் ரூ.100 விண்ணப்பக்கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H