நமது உடலின் ஒவ்வொரு பாகமும் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம். அந்த வகையில் நமது விரல் நகங்களும் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய சொல்ல முடியும், ஆனால் நம் நகங்களில் உள்ள உடல்நலக்குறைவுக்கான அறிகுறிகளை எவ்வாறு தெரிந்து கொள்வது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை, இதற்கு இந்த பண்டைய மருத்துவ நடைமுறையான ஆயுர்வேதம் சிறந்த உதவியை வழங்க முடியும்.
ஆரோக்கியமான நகங்களில் இளஞ்சிவப்பு நகங்கள் இருக்கும், மேலும் அவை எளிதில் உடைந்துவிடாது, அதே சமயம் வெள்ளை நிறமாகவும் உடையக்கூடியதாகவும் இருக்கும் நகங்கள் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகளைக் குறிக்கலாம். குறைந்த அளவு துத்தநாகம் அல்லது இரும்பு மற்றும் தைராய்டு பிரச்சனைகளும் நகங்களை உடையக்கூடிய தன்மையை ஏற்படுத்தும். பலவீனமான நகங்களும் வயதானதன் அறிகுறியாக இருக்கலாம். நகங்கள் எலும்புகளின் துணை தயாரிப்பு மற்றும் ஆரோக்கியத்தின் பிற அம்சங்களாகும். ஆயுவேதத்தின் படி, நகங்கள் உங்களின் என்னென்ன ஆரோக்கியப் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நகங்களில் நீளமான கோடுகள்
இந்த கோடுகள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களின் தவறான உறிஞ்சுதலின் தெளிவான அறிகுறியைக் குறிக்கின்றன. உங்கள் நகத்தில் ஆழமான கோடுகள் இருந்தால், வலுவான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
கிடைமட்ட கோடுகள் அல்லது நகத்தில் பள்ளம்
ஆயுர்வேதத்தின் படி, நகத்திற்கு கிடைமட்டமாக செல்லும் ஒரு ஆழமான கோடு ஒரு வலுவான நோய், தொற்று அல்லது குறைபாடு ஏற்பட்டதற்கான அறிகுறியாகும். இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
கையில் பிறைகள் இல்லாமல் இருப்பது
ஆயுர்வேதம், நகத்தில் இருக்கும் பிறை வடிவம் ஒருவரின் உடலில் உள்ள அக்னி அல்லது நெருப்பைக் குறிக்கிறது. நீங்கள் நகங்களைக் கவனித்தால், நிலவுகள் (லுனுலா) அல்லது மிகச் சிறிய நிலவுகள் இல்லை என்பதைக் கண்டால், இது உடலில் பலவீனமான செரிமானம் அல்லது பலவீனமான அக்னி உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.
பெரிய பிறை வடிவம் இருப்பது
வழக்கமான அளவை விட பெரியதாகத் தோன்றினால், இது உடலில் அதிகப்படியான வெப்பம் இருப்பதைக் காட்டலாம், இது தளர்வான மலம், அதிக அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதல் போன்ற பிட்டா பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
பக்கவாட்டு கோடுகள்
விரல் நகங்களும், கால் நகங்களும் முடியுடன் நெருங்கிய தொடர்புடையவை. ஒரு நோய் அல்லது நீண்ட கால மன அழுத்தத்திற்குப் பிறகு உங்கள் முடி உதிர்வது போல், உங்கள் நகங்களும் அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். பெரும்பாலும் நீங்கள் அதிக மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்கள் நகங்களில் பக்கவாட்டு கோடுகள் தோன்றும்.
வெளிர் அல்லது மஞ்சள் நிற நகம்
எந்த நிறமாற்றமும் அல்லது வெளிர் நிறமும் கடுமையான உடல்நலக் கவலைகளின் அறிகுறியாக இருக்கலாம். வெளிறிய நகங்கள் உங்கள் கல்லீரல், சிறுநீரகம் அல்லது இதயத்தில் உள்ள பிரச்சனைகளை பிரதிபலிக்கின்றன. இது இரத்த சோகை, கல்லீரல் பிரச்சனைகள், இதய நெரிசல் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம். ஒரு மஞ்சள் நிற நகமானது நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, தைராய்டு நோய், நுரையீரல் நோய், நீரிழிவு அல்லது தடிப்புத் தோல் அழற்சி ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.