மாசி மாத ராசி பலன் 2023: சூரியன் + சனி..குரு +சுக்கிரன்..கூட்டணியால் குபேர யோகம் யாருக்கு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


மாசி மாத ராசி பலன் 2023: சூரியன் + சனி..குரு +சுக்கிரன்..கூட்டணியால் குபேர யோகம் யாருக்கு:

மாசி மாதம் அற்புதமான மாதம் கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப்பிறகு சூரியன் சனி கூட்டணி சேருகிறது.

மீன ராசியில் குரு, சுக்கிரன் கூட்டணியும் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகம் கிடைக்கப்போகிறது. மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணம் செய்வதால் கும்ப மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. வழிபாடு செய்வதற்கு ஏற்ற மாதமாக மாசி விளங்குகிறது. சிறப்புமிக்க இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன யோகபலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார்.மேஷ ராசியில் ராகு அமர்ந்திருக்கிறார். ரிஷப ராசியில் செவ்வாய் இருக்கிறார். 28 ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசிக்கு செல்கிறார்.புதன் மகர ராசியிலும் 15 ஆம் தேதி கும்ப ராசியிலும் பயணிக்கிறார். மீன ராசியில் குரு இருக்கிறார். மூன்றாம் தேதி மீன ராசிக்கு வரும் சுக்கிரன் 28 ஆம் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். கேது துலா ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...

எதிர்ப்புகளை எல்லாம் முறியடித்து ஏற்றம் பெற போறீங்க. வீட்டுப் பிரச்சனைகளை சமூகமாக பேசி தீர்ப்பீங்க. வேலை பார்க்கின்ற இடத்தில் சிக்கலான பிரச்சனைகளை சந்திப்பீங்க. இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் பார்ப்பீங்க. விருப்பப்பட்ட பெண்ணின் மனதில் இடம் பிடிப்பீங்க. வீட்டில் மங்கல நிகழ்ச்சிகளை நடத்துவீங்க. நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிக்கு முறையாக மருத்துவம் பார்ப்பீங்க. வியாபாரத்தில் வெற்றி பெற்று சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவீங்க. நிலம் வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் அடைவீங்க. பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளியில் கொண்டு போய் சேர்ப்பீங்க. மகளின் திருமணத்திற்காக நகை வாங்குவீங்க. திருச்செந்தூர் முருகனை வழிபடுங்க. விருப்பமான காரியங்கள் நிறைவேறுமுங்க.

ரிஷபம்

கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....

அவசரப்பட்டு செய்கிற காரியத்தால் கொஞ்சம் நஷ்டப்படுவீங்க. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் அவமானத்தை சந்திப்பீங்க. தொழிலில் மேன்மை அடைந்து எதிர்பாராத லாபம் பெறுவீங்க. நல்ல நண்பர்கள் உதவியோடு புதிய தொழில் தொடங்குவீங்க. மாமனார் மாமியாருக்கு தேவையான உதவிகளை செய்வீங்க. குலதெய்வம் கோயில் நேர்த்திக்கடன நிறைவேற்றுவீங்க. போர்வெல் பழுதாகி புதிய மோட்டார் பொருத்துவீங்க. ரியல் எஸ்டேட் தொழிலில் சரிவை சந்திப்பீங்க. மனைவியின் மனதை புரிந்து கொண்டு நடப்பீங்க. படிப்புக்காக பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவீங்க. திருவண்ணாமலை சென்று வாங்க. பெருமையும் புகழும் அதிகரிக்குமுங்க.

மிதுனம்

எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...

ஆத்திரப்பட்டு யாரையும் பேசாதீங்க. நெருங்கிய சொந்தக்காரர்கங்க உங்களுக்கு எதிரா நடப்பாங்க. பூர்வீக சொத்துக்காக பங்காளி சண்டை போடுவீங்க. நேரத்திற்கு சாப்பிடாமல் வயிற்றுக் கோளாறால் அவதிப்படுவீங்க. காதலியின் தேவையைப் பூர்த்தி பண்ண முடியாமல் சங்கடப்படுவீங்க. அரசாங்க ஊழியர்கள் இடம் மாறுதல் ஏற்பட்டு வேறு ஊருக்கு போவீங்க. கூட வேலை பார்க்கின்றவங்க கோள் மூட்டி உங்கள் வேலைக்கு உலை வைக்க பார்ப்பாங்க. பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கணுமுங்க. நெருங்கி பழகினால் பொருளையும் இழந்து அவமானத்தையும் சந்திப்பீங்க. தொழில் எதிர்ப்புகளை போராடி வெற்றி பெறுவீங்க. திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்க. சூழும் துன்பங்கள் தூர ஓடுமுங்க.

கடகம்

வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...

வெளிநாட்டில் இருந்து கிடைத்த நல்ல செய்தியால் சந்தோஷப்படுவீங்க. அரசியல்வாதிகளோட நட்பால் அரசாங்க காண்ட்ராக்ட்டுகளை பெறுவீங்க. புதிய வீடு கட்டுவதற்காக பூமி பூஜை போடுவீங்க. விவசாயத் தொழிலுக்காக டிராக்டர் வாங்குவீங்க. எதிரிகளாக நெனச்சவங்க கூட உங்களுக்கு உதவி பண்ணுவாங்க. நீண்ட காலமாக குழந்தை இல்லாதவங்களுக்கு சந்தானப் பிராப்தி கிடைக்குமுங்க. உங்களைப் புரிந்து கொண்டு குடும்பத்தினர் ஒத்தாசையாக இருப்பாங்க. வியாபாரத்தில் உள்ள சிக்கல்களை தீர்த்து முன்னேற்றம் அடைவீங்க. பிள்ளைகளின் மேல் படிப்புக்காக வெளியூருக்கு அனுப்ப திட்டம் போடுவீங்க. தஞ்சை பிரகதீஸ்வரர் பெருமானை வழிபடுங்க. நெஞ்சத்து ஆசைகள் எல்லாம் நிச்சயமாக நிறைவேறுமுங்க.

சிம்மம்

அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...

குடும்பத்தில தேவையில்லாத சிக்கல்கள் உருவாகி தூக்கத்தை தொலைப்பீங்க. கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் எச்சரிக்கையாக இருந்தால் நல்லதுங்க. கொஞ்சம் எடக்கு முடக்கா நடந்தாலே மரியாதை குறைஞ்சு போயிருமுங்க. நீண்ட காலமா தொந்தரவு கொடுத்த மனைவியின் கர்ப்பப்பை பிரச்சனைக்கு மருத்துவம் பார்க்க போறீங்க. வியாபாரத்துக்கு போட்டி அதிகரிச்சு அவதிப்படுவீங்க. வாகனங்கள் பழுதாகி, போற வேலைக்கு இடையூறு ஏற்படுமுங்க. பள்ளிக்கூடத்திற்கு போக மாட்டேன் என்று சில பிள்ளைகள் மக்கர் பண்ணி சங்கடத்தை கொடுப்பாங்க. தகுந்த புத்திமதி சொல்லி அனுப்பி வைப்பீங்க.

காளகஸ்திநாதரை வழிபடுங்க. கஷ்டங்கள் பறந்தோடுமுங்க.

கன்னி

அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...

தடங்கலான திருமணம் கைகூடி வந்து வாழ்க்கைத் துணையை கரம் பிடிப்பீங்க. தொழில்துறைக்கு தேவையான உதவிகளை நண்பர்களிடமிருந்து பெறுவீங்க. நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்த்து மேல் அதிகாரிகளின் பாராட்டுக்கு ஆளாவீங்க. மனதுக்குப் பிடித்த மங்கையின் ஆசையை நிறைவேற்றுவீங்க. வியாபாரத்தில் கணிசமான லாபம் அடைந்து பொருளாதாரத்தை பெருக்குவீங்க. நீண்ட காலமாக தொந்தரவு தந்த ஹெர்னியா பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்வீங்க. மறைமுகமான எதிர்ப்புகளை முறியடிப்பீங்க. கட்டுமான துறையில் புதிய நுட்பங்களை புகுத்துவீங்க. காரைக்குடி முத்துமாரியம்மனை வழிபடுங்க. நிறைவான செல்வம் பெறுவீங்க.

துலாம்

தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...

முக்கியமான வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த பலனை அடைய மாட்டீங்க. செங்கல் மணல் வியாபாரத்தில் முதலீடு செய்வீங்க. நண்பரோடு கூட்டுச் சேர்ந்து குவாரி தொழிலில் இறங்குவீங்க. அலைச்சல் காரணமாக போன் செய்யாத இயலாத காரணத்தால் காதலியின் கோபத்துக்கு ஆளாவீங்க. என்னதான் இறங்கி போனாலும் மனைவியின் விருப்பத்துக்கு நடக்க முடியாத நிலை உருவாகுமுங்க. சொன்ன நேரத்துக்கு கடனை அடைக்க முடியாமல் தடுமாறுவீங்க. எச்சரிக்கையாக இல்லாட்டி வாகன விபத்தில் மாட்டி சின்ன காயம் ஏற்பட வாய்ப்பு இருக்குங்க. கஷ்டப்பட்டு வேலை பார்த்தாலும் பலன் சுமாராகத்தான் இருக்குமுங்க. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாளை வழிபடுங்க. சகல சௌபாக்கியங்களும் சித்திக்குமுங்க.

விருச்சிகம்

போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...

பெற்றோரை எதிர்த்து விருப்பப்பட்ட பெண்ணை திருமணம் செய்வீங்க. வியாபாரத்தில் சில சிக்கல்களை சந்திப்பீங்க. தடுமாறி விழுந்த தந்தையாருக்கு நுட வைத்திய சாலையில் கட்டு போடுவீங்க. விவசாயத்தில் மறுபோகம் செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை பண்ணுவீங்க. வீட்டில் மங்கள நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ச்சி அடைவீங்க. விதண்டாவாதம் பேசும் மனைவியிடம் விட்டுக் கொடுத்துப் போய் பிரச்சனை ஏற்படாமல் சமாளிப்பீங்க. அலட்சியமாக வேலை செய்தால் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாவீங்க. பொருளாதார மந்த நிலையைப் போக்க கடுமையாக போராடுவீங்க. லாட்டரி பந்தயங்களில் எதிர்பாராத வெற்றியைப் பெறுவீங்க.

பழனிமலை முருகனின் பாதம் பணியுங்க. கழனி செழித்து செல்வம் பெருகுமுங்க.

தனுசு

வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...

தொட்ட காரியத்தில் வெற்றி பெற்று மன நிம்மதி அடைவீங்க. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபத்தை பார்ப்பீங்க. குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி போடுவீங்க. வேலை காரணமாக சில நாட்கள் வெளியூரில் தங்குவீங்க. காதலன் காதலிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு கடுமையான வாக்குவாதம் நடத்துவீங்க. பிள்ளைகளின் படிப்புச் செலவை சமாளிக்க நண்பரிடம் கடன் வாங்குவீங்க. தேவையில்லாமல் பிரச்சனை செய்கின்ற சகோதரரின் மனதை மாத்துவீங்க. வேலை இடத்தில் சின்ன சின்ன சிக்கல்களை சந்திப்பீங்க. ஆன்லைன் வர்த்தகங்களில் அதிக ஈடுபாடு காட்டாதீங்க. பிள்ளைகளின் பிடிவாத போக்கால் மனம் சங்கட்டப்படுவீங்க. மந்தமான வியாபாரத்தால் சிரமப்படுவீங்க.

பட்டமங்கலம் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாங்க. தொட்டதெல்லாம் துலங்குமுங்க.

மகரம்

வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....

வீடு கட்ட நிலம் வாங்கி பத்திரம் போடுவீங்க. தொழிலில் புதிய வியூகம் அமைத்து வெற்றி பெறுவீங்க. ஒதுங்கிப் போன உறவினர்கள் உங்களை மிகவும் பாராட்டுவாங்க. மிகுந்த எதிர்ப்புகளுக்கு இடையே பெற்றவர்களிடம் காதல் திருமணத்துக்கு சம்மதம் வாங்குவீங்க. உறுதியா நின்னு தாமதப்பட்ட வீட்டு வேலைகளை செய்து முடிப்பீங்க. தர்ம காரியங்கள் செஞ்சி மரியாதைய அதிகரிப்பீங்க. வியாபாரத்தில் மிக ஏற்றமான நிலையை காண்பீங்க. தொழிலுக்காக அடுத்தடுத்து வெளியூர் பயணம் செல்வீங்க. நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு உரிய மருத்துவ சிகிச்சை பார்ப்பீங்க. முக்கிய கடன்களை அடைத்து நிம்மதிப் பெரும் மூச்சு விடுவீங்க. திருநள்ளாறு தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரரை வழிபடுங்க. அவமிருத்த யோகம் விலகுமுங்க.

கும்பம்

சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...

சொத்து பிரச்சனையை தீர்க்க நீதிமன்ற படிக்கட்டு ஏறுவீங்க. வீட்டில் உருவான சிக்கலை களைய பக்குவமா நடந்துக்குவீங்க. தொழில் போட்டிகளை சமாளிக்க கொஞ்சம் சிரமப்படுவீங்க. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவமனையில் சேர்ப்பீங்க. உங்கள் பேச்சை புரிஞ்சுக்காத காதலியின் மனச மாத்த சிரமப்படுவீங்க. திடீரென்று கைகூடி வந்த சகோதரரின் திருமணத்தை நடத்த கடன் வாங்குவீங்க. அனுப்பில்லாமல் வேலை செய்து அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீங்க. சுமாராக நடக்கும் வியாபாரத்தை விரிவாக்க பாடுபடுவீங்க. வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயர்ந்து மகிழ்ச்சி அடைவீங்க. ஒத்தக்கடை யோக நரசிம்மரை வழிபடுங்க. ஆயுள் விருத்தியாகும்முங்க.

மீனம்

பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...

அலுவல் சம்பந்தப்பட்ட அலைச்சல் அதிகமானாலும் மிகுந்த பலன் அடைவீங்க. தொழிலில் பொருளாதார மேன்மையடைந்து எதிர்ப்பாளர்களை பொறாமைப்பட வைப்பீங்க. நீண்டகால நோய் பிரச்சினையிலிருந்து விடுபடுவீங்க. உங்களுடைய விட்டுக் கொடுக்கும் தன்மையால் வீட்டில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடுமுங்க. எதிர்பாராத இடத்திலிருந்து பண உதவி பெறுவீங்க. நிலுவையில் இருந்த கோர்ட் வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்குமுங்க. நெருங்கிய உறவினர்களுக்கு இடையே இருந்த மனக்கசப்பை மாத்துவீங்க. வெளிநாட்டு வேலைக்காக செய்த ஏற்பாட்டில் சாதகமான பதில் கிடைக்குமுங்க. அழகர்கோவில் கள்ளழகர் பெருமானை வழிபடுங்க. தொழில் விருத்தி அடையும்முங்க.

உங்கள் ஜோதிடர் கவிஞர்

அ.பெர்னாட்ஷா, காரைக்குடி

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H