| பணி | கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், கிராம அஞ்சல் பணியாளர் ((Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster(ABPM)/Dak Sevak)) |
| அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள் | 27.01.2023 |
| காலியிடங்கள் | இந்திய அளவில் - 40,889 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாண்டங்களில் - 3,167 |
| வயது வரம்பு | 16.03.2023 அன்று, 18- 40 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி வகுப்பினர் உச்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரையும், பட்டியல்/பழங்குடியின வகுப்பினர் 5 ஆண்டுகள் வரையும், மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரையும் தளர்வுகள் கோரலாம். |
| கல்வித் தகுதி | குறைந்தது 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
| தேர்வு முறை | விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட இருக்கின்றனர் |
| இணைய தளம் | indiapostgdsonline.cept.gov.in |
| கடைசி தேதி | 16.02.2023 (நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்) |
| ஊதியம் | கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM - BranchPostmaster BPM) - ரூ. 12,000 முதல் 29,380 வரை. உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர் (Assistant Branch Postmaster - ABPM /Dak Sevak) - ரூ. 10,000 முதல் 24,470/- வரை |
விண்ணப்பம் செய்வது எப்படி?indiapostgdsonline.cept.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முகப்பு பக்கத்தில், step 1 Registration பகுதியில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் இந்த பகுதியில் சமர்பிக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தாங்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்-ஐ சமர்ப்பிப்பது நல்லது.
பிறகு, step 2 - Apply Online ஐ கிளிக் செய்து, 10ம் வகுப்பு மதிப்பெண் விவரங்கள், காலியிடங்கள் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் நிரப்ப வேண்டும். அதன்பிறகு, விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 செலுத்த வேண்டும். பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை
தேவைப்படும் ஆவணங்கள்: ஆன்லைன் விண்ணப்பத்துடன்சமீபத்தியபுகைப்படம் (50 kbக்கு மிகாமல்), கையொப்பம் (50 kbக்கு மிகாமல்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பெண்களுக்கு முன்னுரிமை: 10ம் வகுப்புத் தேர்வில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் பெண் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.









