வாய் துர்நாற்றம் பெரும்பாலும் மோசமான வாய் ஆரோக்கியத்தின் விளைவாகும். மேலும் நீங்கள் சரியாக பல் துலக்காதபோது இது நிகழ்கிறது.
இது உங்களுக்கு அசெளகரியத்தையும், சில உடல்நல பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். உங்கள் வாயில் துர்நாற்றம் வீசினால், உங்கள் அருகில் யாரும் வரமாட்டார்கள், உங்கள் அருகே நின்று கூட யாரும் பேச மாட்டார்கள். இது உங்களுக்கு சங்கடத்தையும் கவலையையும் ஏற்படுத்தலாம். உங்கள் வாய் துர்நாற்றம் காலப்போக்கில் அதிகரிக்கலாம். வாய் துர்நாற்றத்திற்குப் பின்னால், வாய் வறட்சி, பாக்டீரியா தொற்று, வாய் புற்றுநோய், நுரையீரல் அல்லது தொண்டை தொற்று அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
வாய் துர்நாற்றத்தைப் போக்க ஆயுர்வேதத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில மூலிகைகள் உள்ளன. அவை என்னென்ன மூலிகைகள் என்றும் உங்கள் வாய் துர்நாற்றத்தை போக்க அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
ஆயுர்வேத மூலிகை கஷாயத்தில் வாய் கழுவுதல்
இந்த விஷயத்தில் முதல் தீர்வு, ஆயுர்வேத மூலிகைகள் கலந்து தயாரிக்கப்பட்ட கஷாயம், இயற்கையான மவுத்வாஷாகப் பயன்படுத்தப்படுகிறது. அஸ்வகந்தா, மதுரம், இஞ்சி, திப்பலி, நெல்லிக்காய், சீந்தில், துளசி அல்லது வல்லாரை கீரை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து இந்த மவுத்வாஷ் தயாரிக்கப்படுகிறது. இந்த மவுத்வாஷை ஒரு வாரம் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். இதனை காற்று புகாத டப்பாவில் வைத்து தினமும் 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம்.
கிராம்பு மற்றும் ஏலக்காய் கடா
வாய் துர்நாற்றத்தைப் போக்க கிராம்பு மற்றும் ஏலக்காயை கஷாயமாக்கி சாப்பிடலாம். இஞ்சி, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை 2 கிளாஸ் தண்ணீரில் கலக்கவும். தண்ணீர் கொதித்து, அளவு பாதியாகக் குறைந்தவுடன், தண்ணீரை வடிகட்டி ஒரு குவளையில் ஊற்றவும். கிராம்பு மற்றும் ஏலக்காயின் கஷாயம் வயிறு, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.
திரிபலா நீர்
திரிபலா நீர் நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகியவற்றைக் கொண்டு வாயின் துர்நாற்றத்தை அகற்ற உதவும். இந்த மூன்று மூலிகைகளின் கலவையிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் திரிபலா என்று அழைக்கப்படுகிறது. திரிபலாவில் வைட்டமின் சி, பிரக்டோஸ் மற்றும் லினோலிக் அமிலம் உள்ளது. திரிபலாவில் இருந்து பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைக்கவும். இந்தக் கலவையை வடிகட்டி ஒரு பாட்டிலில் வைக்கவும். இந்த தண்ணீரில் ஒரு நாளைக்கு இரண்டு முறை வாய் கொப்பளிக்கவும். இது இயற்கையான மவுத்வாஷாகச் செயல்படுவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.
இலவங்கப்பட்டை நீர்
இலவங்கப்பட்டை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. துர்நாற்றத்தைப் போக்க இலவங்கப்பட்டையைப் பயன்படுத்தலாம். இலவங்கப்பட்டையில் சின்னமிக் ஆல்டிஹைடு என்ற தனிமம் உள்ளது. இது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. நீங்கள் இலவங்கப்பட்டை தண்ணீரிலும் வாய் கொப்பளிக்கலாம்.
வேப்பம்பூ பொடியால் துலக்குதல்
வேம்பு ஒரு ஆயுர்வேத மூலிகையாகும். இது பொடி, தேநீர் மற்றும் நீர் வடிவில் பயன்படுத்தப்படுகிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்க வேப்பம்பூ பொடியை உங்கள் பற்பசையுடன் கலந்து தடவவும். வேம்புக்கு ஆன்டிவைரல், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் வலி நிவாரணி பண்புகள் உள்ளன. வேம்பு தவிர கற்றாழையையும் பயன்படுத்தலாம். கற்றாழை சாறுடன் வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.