வீட்டில் வேலை பார்க்க ஆள் வைத்துள்ளீர்களா..? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Friday 3 February 2023

வீட்டில் வேலை பார்க்க ஆள் வைத்துள்ளீர்களா..? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:

த்திய அரசின் கணக்கீட்டின் படி, நாட்டில் 47. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டுப் பணியாளர்கள் (Domestic and Household Workers) காணப்படுகின்றனர்.
இருப்பினும், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் இந்த எண்ணிக்கை 20 முதல் 80 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று கணக்கிடுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களவை கேள்வி நேரத்தின் போது பதிலளித்த மத்திய தொழிலாளர் நலன் அமைச்சர் பூபேந்தர் யாதவ், "அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளத்தில்" (E- shram Portal) மட்டும் 2.7 கோடி வீட்டுப் பணியாளர்கள் பதிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவில் இதுநாள் வரையில் வீட்டுப் பணியாளர்களுக்கு என தனித்துவ சட்டமோ, தேசிய கொள்கையோ இயற்றப்படவில்லை. அமைப்பு சாரா தொழிலாளர்கள் சட்டம் (Unorganised Social Security Act 2008), குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டம் ( Child Labour (Prohibition and Regulation) Act ), பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம் (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act 2013) ஆகியவற்றின் கீழ் மட்டுமே வீட்டுப் பணி தொழிலாளர்கள் சட்டப்பாதுகாப்பை பெற்று வருகின்றன.

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் குறைந்தது 18 லட்சம் வீட்டுப் பணியாளர்கள் இருப்பதாக காணப்படுகிறது. இதில், குறைந்தது 7 முதல் 8 லட்சம் பேர் சென்னையில் பணி செய்து செய்கின்றனர். வீட்டுப் பணியாளர்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. இந்தியாவில் முதன்முறையாக, வீட்டுப் பணியை அங்கீகரித்த மாநிலம் தமிழ்நாடு ஆகும்.1982 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படும் 69 தொழில் இனங்களில் வீட்டுப் பணியாளர்களும் இணைக்கப்பட்டனர். மேலும், 2007ல் வீட்டுப் பணியாளர்களுக்கு என்று தனி வாரியத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது.

மேலும், 2007ல் வீட்டு வேலைப் பணியாளர்களை குறைந்தபட்ச சம்பள சட்டத்தின்கீழ் மாநில அரசு கொண்டு வந்தது. இது, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பாகும். இதன்மூலம், குறைந்தபட்ச ஊதியம் வழங்காத உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர வழிவகை செய்யப்பட்டது. இதன் கீழ், வீட்டுப் பணியாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 37 முதல் 39 வரை குறைந்தபட்ச ஊதியமாக கொடுக்க வேண்டும். சராசரி மாத குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 6836 முதல் 8051 வரை கொடுக்கப்பட வேண்டும். வீட்டு முதலாளி தனது தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை தரவில்லை என்றால், அவருக்கு 6 மாத சிறை வாசம் அல்லது 1000 ரூபாய் அபராதம், அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனை விதிக்கப்படும்

தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தின் பயன்கள்: தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நலவாரியத்தின் கீழ், பல்வேறு நலத்திட்டங்களில் தமிழ்நாடு அரசு வீட்டுப் பணியாளர்களுக்கு வழங்கி வருகிறது. உதாரணமாக, குழந்தைகளின் கல்வி உதவித் தொகை, ரூ.5000 திருமண உதவித் தொகை, ரூ. 12 ஆயிரம் மகப்பேறு உதவித் தொகை, ரூ. 1 லட்சம் விபத்து மரணத் தொகை, ரூ. 1500 மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, நீங்கள் பகுதிநேர/ முழு நேர வீட்டுப் பணியில் ஈடுபட்டு வந்தால், உடனடியாக தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். அடையாளச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான, முகவரி Tamil Nadu Unorganised Workers Welfare Board ஆகும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகங்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.
https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H